New Page 1
கொத்தலர் கோதைவியன்
சேரமண்டலக்
கொம்பைத்
தன்பால்
வைத்திருந் தாங்கவள்
தம்கேளிர்
தேடிவர அவர்க்கே
உய்த்திரு
வோர்க்கும் வரிசையும்
ஆற்றி உடனும்சென்று
மைத்துனக் கேண்மை
படைதத்தன்றோ
தொண்டை மண்டலமே
என்று கூறுகிறது.
வணிகர்கள் தம் பெண்
வேளாளர்களிடம் பல நாட்கள் வளர்ந்ததனால் ஒரு சிறிது அவள் ஒழுக்கத்தில் ஐயம் கொண்டு மயங்கியதால்
“மயங்கல் கண்டு” எனப்பட்டது.
தமிழ் நாட்டவர்
தம்பால் வந்த பெண்களைப் பெண்டாகக் கொள்ளாது பெண்ணாகக் கொண்டதைச் சுந்தரர் வரலாற்றில்
காணலாம். கோட்புலியார் என்னும் தானைத் தலைவர் தாம் பெற்ற சிங்கடி, வனப்பகை என்னும் மாதரார்
இருவரையும் சுந்தரர்பால் கொண்டு விடுத்து, அவர்களை அடிமையாக ஏற்றருள வேண்டியபோது ஆளுடை நம்பியார்
அவ்விரு மாதர்களை மகண்மையாகக் கொண்டனர். இதனை,
அடியேன் பெற்ற
மக்கள்இவர்
அடிமையாகக்
கொண்டருளிக்
கடிசேர் மலர்த்தாள்
தொழுதுய்யக்
கருணை அளிக்க
வேண்டும்எனத்
தொடிசேர் தளிர்க்கை
இவர்எனக்குத்
தூயமக்கள்
எனக்கொண்டப்
படியே மகண்மை
யாக்கொண்டார்
பரவை யார்தம்
கொழுநனார்
என்று சேக்கிழார் கூறுமாற்றால்
தெளியலாம். இந்த உண்மையினைத் திருநாவலூரர்,
கூடா மன்னரைக்
கூட்டத்து வென்ற
கொடிறன் கோட்புலி
சென்னி
நாடார் தொல்புகழ்
நாட்டியத் தான்குடி
நம்பியை நாளும்
மறவாச்
|