பக்கம் எண் :

New Page 1

 

       வாரானைப் பருவம்

527

        சேடார் பூங்குழல் சிங்கடி அப்பன்
            திருவா ரூரன் உரைத்த
        பாடீர் ஆகிலும் பாடுமின் தொண்டீர்
            பாடலும் பாவம் பற்றறுமே

        நாணியூரன் வனப்பகை
            அப்பன்வன் தொண்டன்சொல்
        பாணியால் இவைஏத்துவார்
            சேர்பர லோகமே

என்றும் பாடிய திருப்பாடல்களால் உணரலாம்.

    திரு பிள்ளை அவர்கள் கூறவந்த உட்கருத்துப் பண்பு மிக்க வேளாளர் தம்பால் அடைக்கலம் புகுந்தவர்களை ஆதரித்து ஆவன செய்வர் என்பதாம்.  இத்தகைய வேளாளர் குலத்தில் சேக்கிழார் பிறந்தவர் என்பதை அறிவித்துள்ளனர்         

(58)

8.     விற்றங் கியவி பூதியினால்
           விளர்ப்புற் றன்பின் வழிஇயங்கி
       வேறு வேறாம் பரசமய
           வெய்ய கோடை முழுதொழியச்
       சிற்றம் பலநா யகர்கருணைத்
           திரைவா ரிதியில் படிந்துண்டு
       திசைஎங் கணும்தோற் றிடமின்னித்
           தீய ஒழுக்கம் தபக்கறுத்துக்
       கற்றங் கமையார் மலத்துன்பம்
           கழல அரமா முழக்கெழுப்பிக்
       கருதா நின்ற திருத்தொண்டர்
           காமர் வாய்ந்த சரித்திரமாம்
       கொற்றம் பொலியும் மழைபொழிந்த
           கொண்டல் வருக வருகவே
       குன்றைப் பொருமா ளிகைக்குன்றைக்
           கோமான் வருக வருகவே