பக்கம் எண் :

 

       வாரானைப் பருவம்

529

        சாற்றும் மறைதத் துவமசிமா
            வாக்கி யங்கள் தமைஉணர்ந்தால்
        போற்றி அதுநீ ஆனாய்என்
            றறைவ தல்லால் பொருள்இன்றே
        தேற்றும் இதனைத் தெளியாதார்
            தெளியப் பஞ்ச ஆதனமேல்
        ஏற்ற இயம நியமாதி
            யோகம் இருநான் கியற்றுவரால்

என்று கூறி, அவ்வுபதேச மொழி சரி அன்று என்பதையும் அந்நூலே

        ஆர ணங்கள் தத்து வம்அசி
            பதங்க ளின்பொருள் அறிந்திடாய்
        கார ணம்அதுவும் நீயும் என்றிருமை
            கண்டு வேறதின்மை கருதிடாய்
        நார ணன்பிரம னாலும் நாடரிய
            நாய கன்கழல்கள் நண்ணிநீ
        ஏர ணைந்து பொலி சாத னங்கள்கொடு
            யோக ஞானமும் இயற்றிடே

என்று கூறி உய்யும் வகையும் காட்டுகிறது

    பாஞ்சராத்திரி மதத்தார் முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திரன் ஆதிமூலமே என்று அழைத்த போது, வேறு எந்தத் தேவரும் அப்பெயர் தமக்குப் பொருத்தம் அன்று, என்று வாளா இருக்கத் ஆதிமூலமாகிய திருமாலேதான் வந்து காத்தார் ஆதலின், திருமால்தான் உலக முதல்வர் எனக் கூறித் தம்மதப் பெருமையை அறைவர் என்பதைச் சிவஞானசித்தியார் ஆசிரியர்,

பொய்கைவாழ் முதலைவாயில் போதகம் போதமாட்டது
ஐயனே நாதா ஆதி மூலமே என்ற ழைப்ப
உய்யயாம் பணிமால் ஓல ஓலஎன் றோடிச்சென்று
வெய்ய வாய்முதலை வீட்டிக் கரிக்குவீ டருளி னானே

என்று கூறி, அவர்கள் கூற்றுக்கும் தக்க விடை கூறுவாராய்,