பக்கம் எண் :

New Page 1

530

             வாரானைப் பருவம்

கைவரை மூலமேயோ எனக்கரிக் குதவும் காட்டில்
மொய்வரை எடுத்தான் மூலம் ஆயிட வேண்டுமோதான்
ஐயனே முறையோ என்றால் அரசனோ அங்குச் செல்வான்
வையகம் காப்பான் செய்கை வழக்கன்றோ ஊர்க்காப்
                                        பான்போல்

என்று அருளியதையும் அந்நூலில் காணவும்.

    திருச்சிற்றம்பலவன் கருணை வடிவினன் என்பதைச் சேக்கிழார் “கற்பனை கடந்த சோதி கருணையே வடிவமாகி” என்று போற்றுமாற்றால் உணரலாம். இறைவன் கருணைக்கடல் எனத் தோத்திர நூல்கள் பல இடங்களில் கூறுதலை ஈண்டு நினைவு கொள்க.

    சிற்றம்பலவர் கருணைக்குப் பல எடுத்துக் காட்டுக்களை எடுத்துக் காட்டலாம்.  அவற்றுள் சில கீழ் வருவன :  குங்கிலியக்கலய நாயனார் மிக்க பசியினால் இருத்தலை அறிந்து,

    சாலநீ பசித்தாய் உன்தன் தடநெடும் மனையில் நண்ணி
    பாலின்இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக என்றார்,

    அப்பர் பெருமானார் பசித்து இளைத்து வருதலை அறிந்து,

    வெங்கண் விடைவே தியர்நோக்கி
        மிகவும்வழிவந் திளைத்திருந்தீர்
    இங்கென் பாலே பொதிசோறுண்
        டிதனை உண்டு தண்ணீர்இப்
    பொங்கு குளத்தில் குடித்திளைப்புப்
        போக்கிப் போவீர் எனப்புகன்றார்.

    சீர்காழிச் செம்மலார் அழுவதை அறிந்த திருத்தோணியப்பர், தம் கருணையினால்,

    அழுகின்ற பிள்ளையார் தமைநோக்கி அருட்கருணை
    எழுகின்ற திருவுள்ளத் திறைவயர்தாம் எவ்வுலகும்
    தொழுகின்ற மலைக்கொடியைப் பார்த்தருளித் துணை
                                            முலைகள்
    பொழிகின்ற பாலடிசில் பொன்வள்ளத் தூட்டென்ன

என்று பணித்தருளினார்.