ஆழ
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க
முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய்
நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ
ரெம்பாவாய்
என்று நாய்ச்சியாரும்
நவின்றிருப்பதைக் காண்க.
(59)
9. விள்ளும் மலர்ஆ
தனத்தானும்
வெய்ய சுதரி
சனத்தானும்
விரும்பும் அதிகா
ரக்கதையா
விளம்பா நின்ற
கோல்கொள்ள
நள்ளும் பிரம சரியர்எலாம்
நாடும் பலாசக்
கோல்கொள்ள
நான்காம் ஆச்சி
ரமத்தமைந்தார்
நயந்து முந்தூழ்க்
கோல்கொள்ளத்
தெள்ளும் வணிகர்
குலம்எல்லாம்
தேற்றும்
துலாக்கோல் அதுகொள்ளச்
செம்பொன்
மோலி அரசர்எலாம்
செங்கோல்
கொள்ளச் சிறுகோல்கைக்
கொள்ளும் குலத்தில்
உதித்தஅருள்
கொண்டல்
வருக வருகவே
குன்றைப் பொருமா
ளிகைக்குன்றைக்
கோமான் வருக
வருகவே
(அ. சொ.)
விள்ளும்-மலரும், மலர் ஆதனத் தான்-தாமரை மலராகிய ஆதனத்தில் உள்ள பிரமதேவன், வெய்ய-கொடுமை
மிக்க, சுதரிசனத்தான் - சுதரிசனம் என்னும் சக்கரம் படைத்த திருமாலும், கதை-தண்டு என்னும்
ஆயுதம், விளம்பாநின்ற-விளம்புகின்ற, நள்ளும்-வேத வேதாந்தத்தை விரும்புகின்ற, பலாசக்கோல்-முள்முருக்கம்
கொம்பு, நான்காம் ஆச்சிரமத்து அமைந்தார்-நான்காம் நிலையாகிய சந்நியாச நிலையில் அமர்ந்தவர்,
ஆச்சிரம்-நிலை,
|