பக்கம் எண் :

இப

538

             வாரானைப் பருவம்

    இப்பண்புகளை நன்கு தெளிந்தவர் வணிகர் என்ற காரணத்தால்தான் திரு பிள்ளை அவர்கள், தெள்ளும் வணிகர் என்றனர்.  துலாக்கோல் தன்பால் வைத்த பொருள்களின் நிறையின் ஏற்றத் தாழ்வுகளை இனிதின் காட்டவல்லது.  இது குறித்தே செந்நாப் போதார், “சமன் செய்து சீர்தூக்கும் கோல்” என்று துலாக்கோலுக்குரிய இக்கணத்தைக் கூறினர்.  இதனால்தான் ஈண்டு “தேற்றும் துலாக்கோல் எனப்பட்டது.

    மன்னர்கள் தம் கையில் செங்கோல் பிடித்து அரசு இயற்றுதற்கு அடிப்படைக் காரணம், வேளாளர் தம்கையில் சிறுகோல் பிடித்து ஏர் அடித்து உழவு செய்வதினால்தான் என்ற உறுதிப் பாட்டை உமாபதியார்,

ஏரால்எண் திசைவளர்க்கும் புக்ழவே ளாளர்
    ஏரடிக்கும் சிறகோலால் தரணிஆளச்
சீராரும் முடியரசர் இருந்து செங்கோல்
    செலுத்துவர்வே ளாளர்புகழ் செப்ப லாமோ

என்று விளம்பியுள்ளனர்.

    கம்பரும்,

        பொங்கோதை கடல்தானைப்
            போல் வேந்தர் நடத்துபெருஞ்
        செங்கோலை நடத்துங்கோல்
            ஏர்அடிக்கும் சிறுகோலே

என்றனர்.

    இத்தகைய மாண்புகளுக் கெல்லாம் நிலைக்களனாம் வேளாளர் குலத்து உதித்தவர் சேக்கிழார் எனச் சிறப்புடன் மொழிய வந்த திரு பிள்ளை அவர்கள்,

        “சிறுகோல் கைக்கொள்ளும் குலத்தில்
         உதித்த அருள் கொண்டல் ;’

என்று பாடி மகிழ்ந்தனர்.                                                                                  

(60)