பக்கம் எண் :

புகல

54

             காப்புப் பருவம்

புகலியர்கோன்“  என்பது உமாபதி சிவத்தின் வாக்கு. திருஞானசம்பந்தரே தமது திருவாக்கில்,

போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னன் உடல்உற்ற தீப்பிணி ஆயின தீர

என்று அருளிச் செய்துள்ளார்.

    மூவர் என்னும் தொகைக்குறிப்பு அப்பர், சுந்தரர், சம்பந்தரை உணர்த்திவரும்.  “மொழிக்கு மொழி தித்திப்பாகும் மூவர் சொலும் தமிழ்“ எனத்தவராச சிங்கமாம்தாயுமானார் சாற்றி இருப்பதையும் காண்க.  முதல் மூவர் என்றது  “ மூவர் முதலிகள் “ என்னும் வழக்குப்பற்றி ஆகும்.

வேதம் என்றதும் வடமொழி வேதநினைவு வருதல் யாவர்க்கும் இயல்பு.  வேதம் என்பது வடமொழியில் இருப்பதுதான் என்று நினைப்பது தவறான கொள்கையாகும்.  வேதம் எம்மொழியிலாயினும் இருக்கலாம்.  ஆனால், அவ்வேத வாக்கியங்கள் உளம் தூய பெருமக்களால் செய்தனவாக இருக்கவேண்டும்.  இதனை உட்கொண்ட தொல்காப்பியனார்

    நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த
    மறைமொழி தானே மந்திரம் என்ப

என்று வேத மந்திரத்திற்கு விளக்கம் தந்துள்ளனர். அவரை அடி ஒற்றியே திருவள்ளுவரும்,

    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும் “ 

என அறிவித்துள்ளனர்.

    இவ்விலக்கண இலக்கிய சான்றுகளைக் கொண்டு காணும் போது, மூவர்முதலிகளும் பாடிய பாடல்கள் வேதம் என்பது புலன் ஆகும்.  இது குறித்துத் திருஞானசம்பந்தர் வரலாற்றில் சேக்கிழார்,  “பண்ணுதமிழ் மறையாம் பதிகம் பாடித் திழுக்கடைக்காப்புச் சாத்தி மன்னும் கவுணியர் போற்றி நிற்க“  என்றும் கூறியுள்ளார்.  திருக்களிற்றுப்படியாரில்,