வந
வந்ததைக் கொண்டு தெளியலாம்.
இதனை உமாபதியார், “நித்தன் உறை திருநாகேச்சுரத்தில் அன்புநிறைதலினால் மறவாத நிலைமைமிக்கார்”
என்று உணர்த்தியுள்ளனர். பொதுவாக இவருக்குச் சிவபெருமானிடத்தில் இருந்த பக்தியினைச்
சிவபெருமானைப்பற்றிப் பாடியுள்ள வணக்கப் பாடலாலும், மேலும், இவருக்கிருந்த சைவப் பற்றினை
இவர் ஐந்தெழுத்தைப் பற்றியும் திருநீற்றைப் பற்றியும் அங்கங்கே பாடி இருத்தலைக் கொண்டும்
உணர்ந்து கொள்ளலாம். ஆசிரியர் பொதுப்படப் பக்திக் கடலாகச் சேக்கிழாரைக் குறிப்பிட்டிருப்பதால்,
ஆண்டவன் பக்தியே அன்றி, அடியார் பக்தியும் இவர் கொண்டவர் என்பதைத் தொண்டர் புராணத்தில்
எங்கும் காண்கின்றோம். ஒவ்வோர் அடியார் புராணத்தை முடித்து, அடுத்த அடியார் புராணத்தைக்
கூறுவதாகக் கூறும் போதும் அடியார்களை வணங்கியே கூறுவர்.
ஆறு முடிமேல் அணிந்தவருக்
கடியார் என்று
கறிஅமுதா
ஊறி லாத தனிப்புதல்வன்
தன்னை அரிந்தங்
கமுதூட்டிப்
பேறு பெற்றார் சேவடிகள்
தலைமேற் கொண்டு
பிறஉயிர்கள்
வேறு கழறிற் றறிவார்தம்
பெருமை தொழுது
விளம்புவாம்
என்று பாடித் தம் அடியார்
பக்தியை உணர்த்தியவாறு உணர்க.
“உலவாதமைந்த சிவபோகம்”
என்பதற்கு எடுத்துக் காட்டாக, நமது சைவ மடங்கள் இன்றும் திருக்கயிலாய பரம்பரை என்று வழங்கப்
பட்டுச் சிவபோக பரம்பரையை வளர்த்து வருவதைக் கண்கூடாகக் காணலாம். பண்டார சாத்திரங்களில்
“சிவபோகசாரம் !” என்னும் நூல் இருப்பதையும் அறியவும். உலகம் எங்கும் இச் சைவ போகம்
இருப்பதை அங்கங்குச் சிவலிங்க உருவங்களும், சைவக் குறிப்புக்களும் காணப்படுதலால் அறியலாம்.
|