பக்கம் எண் :

7

7.    அம்புலிப் பருவம்

1.     பாடுமதி யோன்எனப் படுதலால் வாய்விண்டு
           பதினா யிரம்சுரும்பர்
       பண்பாட இன்நறவு வீசுகழு நீர்மாலை
           பாங்குற உவந்திடுதலால்
       நீடுசுடர் படுசம்பு வொடுகூட லால்கலை
           நிரம்பத் தழைத்திடுதலால்
       நெடியஅம் பரவைஅல றத்தோன்ற லால்என்றும்
           நிகழ்சாந்த மேஉடைமையால்
       வாடுதலில் சேக்கிழான் ஆதலால் நகும்ஏர்
           வளம்தழுவ லால்எம்ஐயன்
       மானுதல் தெரிந்துவரு கென்றழைத் தான்மழைபெய்
           வானம்கிழித்து மேல்போய்     
       ஆடுகொடி மாளிகைக் குன்றைநகர் ஆளியுடன்
           அம்புலீ ஆடவாவே
       அருள்உருத் தேசுபொலி அருள்மொழித் தேவனுடன்
               அம்புலீ ஆடவாவே

    (அ. சொ.) பாடு-பெருமைமிக்க, மதியோன்-அறிவுடை யோன், சந்திரன், விண்டு-மலர்ந்து, சுரும்பர்-வண்டுகள், பண்-இசை, நறவு-தேன், கழுநீர்மாலை என்பது ஒருவகை மலர்மாலை, (செங்குவளை மலர்) ஆம்பல்-செங்குவளை மலர், பாங்குற-அழகுற, நன்மை பொருந்த, உவந்திடுதலால்-மகிழ்வதனால், நீடு-அளவில்லாத, சம்புவொடு-சிவனோடு, சுகத்தைத் தருபவனாகிய இறைவனோடு, கலை-சாத்திர அறிவு, அம்-அழகிய, பரவை-கடல், வம்பர்-வீணர், அவை-கூட்டம், சாந்தம்-அமைதி, குளிர்ச்சி, சேக்கிழான்-சேக்கிழார் என்ற பெயருடைமை, இரடபராசிக் குரியவன், ஏர் - அழகு,