கலப
கலப்பை, சே-இரடபம்,
மானுதல்-ஒத்தல், நகர்ஆளி-நகரில் தோன்றிய சிங்கம் போன்ற சேக்கிழார், அம்புலீ-சந்திரனே,
தேசு-ஒளி, பொலி-விளங்கும், அருண்மாழித் தேவர்-சேக்கிழாருக் குரிய மற்றொரு பெயர்.
விளக்கம் : அம்புலி
என்பது நிலா. இந்நிலாவை, நோக்கி அழைத்துக் குழந்தையுடன் ஆடும்படி கேட்டலின் இப்பருவம் அம்புலிப்
பருவம் எனக் குறிக்கப்பட்டது. இது குழந்தை பிறந்த பதினெட்டாம் மாதத்தில் நிகழ்த்தும் நிகழ்ச்சி,
“மதிஈர் ஒன்பதில் மதியை அழைத்தலும்” என்று பிங்கலந்தை நிகண்டு கூறுதல் காண்க. இப்பருவத்திற்கும்
ஏனைய பருவங்களுக்கும் வேறுபாடு உண்டு. செங்கீரை முதலிய பருவங்கள் பாட்டுடைத் தலைவனாம் குழந்தையை
நேரே விளித்து, இவ்வாறு செய்க என வேண்டுதலாகும். ஆனால், அம்புலிப் பருவத்தில் மட்டும் நிலாவை
அழைத்துக் குழந்தையின் மாண்பினைச் சொல்லி அழைப்பதாகும்.
அம்புலிப் பருவம்தான்
பிள்ளைத் தமிழ் நூலை பாடும் புலவன், தன் புலமையினைக் காட்டுதற்கு மிகச் சிறந்த இடமாகும்.
இவ்வாறே ஒவ்வொரு பிரபந்தத்திலும் ஒவ்வோர் இடம் சிறப்பிடம் பெற்றுள்ளது. கலம்பகத்தில்
அம்மானை என்னும் உறுப்பைப் பாடுவதில் தன் அறிவாற்றலைக் காட்டிப் பாடவேண்டும். இன்றேல்
இழுக்கு எய்துவன். இவ்வாறு பாடும் ஆற்றலை அழகிய மணவாளதாசர் என்னும் திவ்விய கவி பிள்ளைப்
பெருமாள் ஐயங்கார் பெறாததனால் அன்றோ, “ஐயங்கார் அம்மானையில் அடி சரக்கினார்” என்னும்
அபவாதத்திற்கு உள்ளாயினர்?”
பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவரங்க நாதனுக்குப் பெருமைகூற எண்ணி,
தேனமரும் சோலைத்
திருவரங்கர் எப்பொருளும்
ஆனவர்தாம் ஆண்பெண்
அலியலர்காண் அம்மானை
ஆனவர்தாம் ஆண்பெண்
அலிஅலரே யாமாகில்
|