ச
சானகியைக் கொள்வரோ
தாரமாய் அம்மானை
தாரமாயக் கொண்டதுமோர்
சாபத்தால் அம்மானை
என்று அம்மானைப் பாடலைப்
பாடினர். இவ்வம்மானைப் பாடல் பாடவேண்டிய முறையில் அமைந்துள்ளது. ஆனால், தாம்
முழு முதலாகக் கொண்ட திருவரங்கனுக்குச் சாபம்
உண்டு. என்ற பொருளையும் அமைத்துப் பாடிவிட்டனர். ஆதலின் அய்யங்கார் அம்மானையில்,
அடிசரக்கினார் எனப் பிறர் இழித்துக் கூறும் நிலையினை எய்தினார். ஆனால், அம்மானை
பாடிப் பல புலவர்கள் வீறு எய்தியுள்ளனர். திருமால் சாபம் உற்று அவதாரங்களை எய்தியதைச்
சிவஞான சித்தியாரும்,
தவகுண னாய்மால்
சென்று தீவியைச்
சக்க ரத்தால்
அவகுணம் செய்தன்
றோடப்
பிருகுவந்
தவளைப் பார்த்துச்
சிவனல தறியேன்
ஆகில்
இதுசெய்தோன்
செறிக பத்துப்
பவம்என மொழிய
மாலும்
பயப்பட்டுப்
பதறி வீழ்ந்தான்
என்கிறது.
உலாவில் பெதும்பைப்
பருவம் சிறந்தது ஆதலின், அதனையும் திறம்படப் பாட வேண்டியது புலவன் கடனாயிற்று. இவற்றை எல்லாம்உட்
கொண்டே அவ்வையார்,
காசினியில்
பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம்
பேசும் உலாவில்
பெதும்பைப்புலி-
என்று கூறியுள்ளார்.
அம்புலி பருவம்
பாடும்போது எங்ஙனம் தன் திறனைக் காட்டவேண்டி உளதெனில், பிள்ளைத் தமிழ்ப் பாட்டுடைத்தலைவனாம்
குழந்தையின் மாண்பினைப் பேசி, அம்மாண்பு சந்திரனுக்கு இல்லை என்பதைக் காட்டியும், பாட்டுடைத்
தலைவனுக்கும் நிலவுக்கும் ஒப்புமை காட்டியும் பாட்டுடைத்
|