பக்கம் எண் :

548

             அம்புலிப் பருவம்

தலைவனாம் குழந்தையுடன் வந்து ஆடுமாறு அழைக்கும் முறையில் பாடுதலாம் என்க.  அங்ஙனம் அழைக்கையில் சாம உபாயம், பேத உபாயம், தான உபாயம், தண்ட உபாயம் இவற்றை எல்லாம் மேற்கொண்டு அழைக்கும் முறையிலும் பாடவேண்டும் பிள்ளைத் தமிழ் பாடும் புலவன்.  இங்ஙனம் எல்லாம் பாடுதலில் தலைசிறந்தவர் திரு. பிள்ளை அவர்கள்.  இவர் குமரகுருபரரைப் போலப் பல பிள்ளைத் தமிழ் நூல் களைப் பாடிய பேரறிஞர். இதனால் இவர் பிள்ளைத் தமிழ் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்னும் சிறப்புடன் அழைக்கவும் பட்டனர். இவர் பாடிய ஏனைய பிள்ளைத் தமிழ் நூல்களிலும், இச்சேக்கிழார் பெருமானார் மீது பாடப்பட்ட பிள்ளைத் தமி்ழில் தமது முழுத் திறனையும் திரு.  பிள்ளை அவர்கள் காட்டியுள்ளனர் என்பது வெறும் புகழ்ச்சி அன்று ;  உண்மையே ஆகும்.  இஃது உண்மை என்பதை இதற்குமுன் வந்த பருவங்களின் பாடல்களிலும் அவற்றின் விளக்கங்களிலும் கண்டோம்.  இனி இப்பருவத்தில் அவரது தனித்திறமையினையும் காண்போமாக.

    இம்முதற் பாடல், சேக்கிழாரை ஒருசார் சந்திரன் ஒப்பாவன் என்ற ஒப்புமை காட்டி, அவனை அழைப்பதைத் தெரிவிக்கின்றது.  ஆகவே, இதன்கண் சிலேடை அணியும் அமைந்துள்ளது.  இப்பாடல் சாம உபாயம் அமைந்த பாடல் ஆகும்.

    சந்திரன் பெருமைக்குரியவன் என்று புலவர்களால் பாடப்படும் காரணத்தால் அறியலாம்.  சேக்கிழார் நிலாவை “நீற்றின் பேரொளி போன்றது நீள் நிலா” என்றும் பாடினர் அல்லரோ?  ஆதலால் புலவர்களால் பாடப்படும் மதியோனும் ஆவான்.  புலவர்கள் பலரும் சந்திரனைப் பாடுதலை அவ்வவர்தம் நூலில் காணலாம்.  அதனால் சந்திரனும் பெருமைக்குரியவன்.  சந்திரன் தோன்றக் கழுநீர மலர்கள் மலரும்.  இக்காரணத்தால் சந்திரனைக் குவளை மலர்கட்குக் கணவன் என்றும் புலவர்கள் கூறுவர்.  ஆகவே, சந்திரன் குவளையை உவப்பதும், குவளைகள்