சந
சந்திரனை உவப்பதும்
மரபாயிற்று. பதினாயிரம் வண்டுகள் என்றது பல வண்டுகள் என்பதாம். இவ்வாறு மிகுதிப்படுத்திக்
கூறுதல் புலவர் மரபு. வில்லிபுத்தூராரும், விதுரர் வாயில், “அறுநூறாயிரம் மடையர் (சமையல்காரர்)
தம்மை நோக்கினார் அவர்களும் விரைவுடன் சமைத்தார்” என்று பாடியுள்ளனர். மலர்கள் மலர்ந்தால்
வண்டுகள் சூழ்ந்து ஒலிப்பதை “பண்பாட” என்றனர். “வண்டுதமிழ்ப் பாட்டிசைக்கும் தாமரையே” என்றனர்
கம்பர். சந்திரன் சிவ பெருமானது சடையில் கூடியிருக்கிறான். இதனால் இறைவன் சந்திரசேகரன்
என்ற பெயரையும் பெற்றுளான் அல்லனோ? இறைவன் பிறைசூடிய சிறப்பை நமது திருமுறைகள் பலபடி எடுத்து
இயம்புகின்றன. இறைவன் சீரொளிய தழல் பிழம்பாய்நின்றவன். அரும்பெருஞ் சோதி ஆதலின்,
“நீடு சுடர்படு சம்பு” என்றனர்.
சம்பு என்னும் பெயர்
இறைவனுக்கு இருப்பதன் காரணம், அவன் இன்புருவன் ஆதலினால் என்க. அவன் இன்புறுவினன் என்பதை
மணிமொழியார்,
தினைத்தனை உள்ளதோர்
பூவினில்தேன்
உண்ணாதே
நினைத்தொறும்
காண்தொறும்
பேசுந்தொறும்
எப்போதும்
அனைத்தெலும்
புள்நெக
ஆனந்தத் தேன்சொரியும்
குனிப்புடை யானுக்கே
சென்றூதாய்
கோத்தும்பீ
என்றும், “சட்டோ நினைக்க
மனத்தமுதாம் சங்கரன்” என்றும் அறிவித்துள்ளதை அறிவோமாக.
சந்திரன் பதினாறு
கலைகளுடன் திகழ்பவன் ; திருப்பாற்கடலில் தோன்றிய சிறப்பும் சந்திரனுக்கு உண்டு. சந்திரன்
குளிர்ந்த ஒளியுடையவன். சந்திரனது குளிர்ந்த ஒளியைக்
|