பக்கம் எண் :

New Page 1

 

       அம்புலிப் பருவம்

551

செருகல், வாந்தி, கபம், உணர்ச்சியின்மை, விறைப்பு இவ்வேழு மிக்கபின் மரணமே என்பது வாகட விதி.)  இதனை அறிந்தே சேக்கிழார் மேல்பாடலில், “ஆவிவிட” என்றனர்.  “அருக்கன் முதல்கோள் அனைத்தும் அழகிய உச்சங்களிலே பெருக்கவலியுடன் நிற்க” என்று கணித நூல் கலையினையும், “திருவடியில் திருப்பஞ்ச முத்திரையும் திகழ்ந்திலங்க” என்று ரேகை சாத்திரக் கலையினையும் (பஞ்சமுத்திரை என்பன பத்மம், சங்கம், மத்ஸயம், சக்கரம், தண்டம் எனும் பஞ்ச ரேகைகள்) பற்றிய கலைக் குறிப்புக்கள் இவர் பாடலில் காணப்படுதல் கொண்டு உணர்வோமாக,  மற்றும் பல் கலை ஞானக் கருத்துக்கள் இவர் நூலில் உண்டு.  இன்றேல்,

    சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
    பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
    உவமைஇலாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம்

என்று ஞானவகைகளைக் கூற இயலுமோ?

    இது குறித்தே “கலைநிரம்பத் தழைத்திடுதலால்’ என்றனர்.  இவரது தோற்றத்தால் வம்பர் கூடிய அவைகள் அலறி வாய் அடங்கின.  நெடிய வம்பரவை என்பதை நெடிய+அம்+பரவை எனவும், நெடிய+வம்பர்+அவை எனவும் பிரித்துச் சிலேடைப் பொருள் காண்க.  சேக்கிழார் சாந்த வடிவினர் என்பதைக் கூற வேண்டியதில்லை.  சேக்கிழார் சேவாகிய ரிஷபத்தை உரிமையாக உடையவர்.  உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பின்மையாலும், மற்றைய பணிகட்குப் பழுதுண்டு ஆதலாலும் இவர் எருதால் ஏராம் கலப்பை வளத்தால் உழுது என்றும் மேன்மை கொண்டவர்.  மேலும், சேக்கிழார் குடியில் சிறந்து விளங்கியவர்.  பதினாயிரம் சரும்பர் என்பது சிவனடியார் பலரைக் குறிக்கும்.  சிவ பெருமானுடன் இரண்டறக் கலந்தவர்.  அதனால் சம்புவோடு கூடலால் எனப்பட்டார்.

    ஆகவே, சேக்கிழார் சந்திரனுக்கு ஒப்பாவர்.  இந்த ஒப்புமை நயம் செய்யுளில் இருத்தலை உய்த்து உணர்ந்து கொள்ளவும்.  வானம் கிழித்துச் சென்று கொடிகள் ஆடும்