என
என்றது உயர்வு நவிற்சி.
கொடியின் உயர்வைக் கூறவரும் புலவர்கள் கொடிச்சீலை சந்திரனின் மாசினைத் துடைக்கும் என்றும்
கூறுவர்.
சேக்கிழாருக்குரிய
பெயர்களில் அருண்மொழி என்பதும் ஒன்று. அருண்மொழி என்ற பெயர் இராஜராஜனுக்குரிய பெயர்.
“அலை புரியும் புனல்பொன்னி ஆறுடைய சோழன் அருண்மொழிக்கு” என்ற திருமலைக்கல் வெட்டைக்
காணவும். பெற்றோர்கள் இம்மன்னனிடத்துக் கொண்ட அன்பினால் இப்பெயரைச் சூட்டினர். சேக்கிழார்
தெய்வ ஒளி பெற்றமையின், “அருள்உருத்தேசுபொலி அருண்மொழித் தேவன்” என்றனர். இல்லை என்றால்,
அநபாயன் கவரி வீசி இருப்பானா?
(62)
2. மேயஅம் போருகம்
எலாம்குவி கரத்தினை
இராமனை அடங்க
அளவா
வியன்சாலி
யொடுபொலிய மகிழ்வையால் ஓர்அறவர்
விழியின்வெளி வந்தொளிருவை
பாயபர மன்சடா
டவிஅமரும் வரநதிப்
பந்தமுளை நந்தமர்கரப்
பண்ணவனும் மிகையெனப்
பல்உயிரும் ஓம்பிடப்
படுகருவி யாய்நின்றனை
நேயமிகும் இவையாதி
யால்எங்கள் பெருமானை
நிகரா திராய்அடுக்கு
நிலையேழு கொண்டமையின்
உலகேழு மேஎன
நிரம்புபா
வலர்புகழுதற்
காயமணி மாளிகைக்
குன்றைநகர் ஆளியுடன்
அம்புலீ ஆடவாவே
அருள்உருத்
தேசுபொலி அருண்மொழித் தேவனுடன்
அம்புலீ ஆடவாவே
[அ. சொ.]
மேய-தடாகங்களில் பொருந்திய, அம் போருகம்-தாமரை மலர்கள், இராமனை-இரவுக்கரசனாய்
|