3
3. இரவோன் எனத்திரிவை
நீமகாப் பிரபுஎன
எங்கள்ஐ யன்பொலிகுவன்
இகழ்ச்சிசால்
கள்வனை உவப்பைநீ உவவாமல்
இவன்வெறுப்
பான்எஞான்றும்
உரவோன்எம்
வள்ளலே நல்லோன் எடுத்தினி
உரைப்பதெவன்
நீஅல்லோனே
உயர்வினால் எமன்வான
வன்காண் உரைப்பார்
உனக்கும்ஒரு தானவப்பேர்
பரவோன்அ லாதவன்
எனல்குறித் தல்லவோ
பாதிகொண் டான்நின்னைஎம்
பண்ணவனை முழுமையும்
கொண்டனன் காண்மணிப்
பணியெனத் தோள்புனைந்த
அரவோன் உணர்ந்திடுதி
குன்றைநகர் ஆளியுடன்
அம்புலீ ஆடவாவே
அருளுருத்
தேசுபொலி அருள்மொழித் தேவனுடன்
அம்புலீ ஆடவாவே
(அ. சொ.)
இரவோன்-இரவில் தோன்றுபவன், யாசகம் புரிபவன், ஐயன்-தலைவராம் சேக்கிழார், பொலிகுவன்-விளங்குவர்,
சால்-மிகுந்த, கள்வனை -நண்டை, திருடனை, கடகராசியை, உவப்பை - விரும்புவாய், உவவாமல் -
விரும்பாமல், எஞான்றும் - எக்காலத்தும், உரவோன் - அறிவு வன்மை மிக்கவன், வள்ளல் -
வள்ளன்மையில் சிறந்த சேக்கிழார், அல்லோனே -நல்லவன் அல்லாதவன், ஞானி அல்லாதவன், இரவில்
தோன்றுபவன், எமன் - எம்தலைவர் (சேக்கிழார்) வானவன்-சிறந்தவர், தேவர், மேலானவர் தானவப்பேர்-இராட்சதன்
என்ற பெயர், (சந்திரனுக்குத் தானவன் என்ற பெயர் உண்டு) பரவோன் அலாதவன்- போற்றுதற்கு உரியவன்
அல்லாதவன், பரவோன் - மேலாயவர், பண்ணவனை-தேவனாகிய சேக்கிழாரை, மணிப்பணி-இரத்தினாபரணம்,
அரவோன் - பாம்பையணிந்தவனாம் சிவபெருமான்.
|