கற
கற்பகப்பூந் தளிர்அடிபோய்க்
காமருசா ரிகைசெய்ய
உற்பலமென் முகிழ்விரல்வட்
டணையோடும் கைப்பெயரப்
பொற்புறுமக் கையின்வழிப்
பொருகயல்கண் புடைபெயர
அற்புதப்பொற் கொடிதுடங்கி
ஆடுவபோல் ஆடுவார்
என்ற இவரது நடனக்
கலைஞானத்தைக் காண்க. இவரது ஊக்கத்தினை இப்பெரிய புராணத்தினை ஓராண்டில் முடித்ததனால்
அறியலாம். இவரது திண்மையினை அரசனிடம் “சிந்தாமணிக் கதை வேண்டா, சிவனடியார்
கதைகளைக் கேட்க” என்று கூறியதனால் தெளியலாம், அப்படிக் கூறி வெற்றி கண்டதையும் அறியலாம்.
சேக்கிழார்க்கு உள்ள சிறப்பு எப்புலவர்க்கும் இல்லை. இவர் தெய்வப்
புலவர் என்ற பெயரினைப் பெற்றவர். இப்பெயருடைய மற்றொருவர் திருவள்ளுவர்.
இறைவன் எடுத்துக் கொடுத்த தொடர் பெற்றுப் பாடிய சிறப்பும் பெற்றவர்.
இவர்க்கு முன் இச்சிறப்புப் பெற்றவர் சுந்தரர். ஏனைய புலவர்களின் சிறப்பினைத் தனித்தனிப்
பாடல்களான தனியன் பாக்களால் அறியலாம். இவரது சிறப்பினை விளக்கும் தனிநூல்
பெற்றவர் இவரே ஆவார். அதுவே இப்பிள்ளைத் தமிழ். தனிப் புராணமும் பெற்றவர்
இவரே. அப்புராணமும் சித்தாந்த செம்மலாம், சித்தாந்த நூல் பல செய்த ஸ்ரீ உமாபதி சிவத்தால்
பாடப்பட்டது. புலவரின் சிறப்பும் நூற் சிறப்பும் கூறப்பட்ட தனிநூல் பெற்றவர் திருவள்ளுவரை
அன்றி வேறு யாரையும் கூற இயலாது. அதுவே திருவள்ளுவ மாலை. சைவ நூல் புலவர்கள் பெரிதும்
சேக்கிழார்க்கும் வணக்கப் பாடலைக் கூறி வணங்குவர். இச்சிறப்புப் புலவர்களுள்
யார்க்கு உண்டு? அருள்நாத ஒலியில் எழுந்த மகாமந்திரங்களாக விளங்கும் திருமுறைகளோடு இவரது
நூலும் திருமுறைகளுள் ஒன்றாக விளங்குகிறது என்றால், இதனினும் வேறு சிறப்புயாது வேண்டும்? ஏழு திருமுறைகட்குப்
பின் ஒவ்வொரு திருமுறைகளாகப் பதினொன்றாகிப் பின் பன்னிரண்டாகத் திருத்தொண்டர் புராணம்
சேர்க்கப்பட்டபின், வேறு நூல்கள் திருமுறை
|