வ
வானவர் எனப்பட்டார்.
சேக்கிழார் தேவர்களுள் ஒருவராகக் கோயில்களில் பூசிக்கப்பட்டு வருபவர். சந்திரன் தேவர்களுள்
ஒருவனே ஆயினும், ராட்சதன் எனப் பொருள்படும் தானவன் என்ற பெயரும்உடையன். ஆதலின், சிறுமையுற்றவன்
ஆயினன். சேக்கிழாரை எல்லோரும் பரவினர். பரவுகின்றனர். பரவப்படுபவரும் ஆவார். ஆகவே,
அவர் பரவோன் ஆயினர். சந்திரன் அத்தகையன் அல்லன். பரவுவோர் இகழவும் செய்வர். ஆகவே,
பரவுவோன் அலாதவன் எனப்பட்டான்.
இறைவன் சந்திரனை
முழுமையும் கொள்ளாது, பாதி கொண்டமைக்குக் காரணம், பரவோன் அல்லன் என்பதனால் என்றது தற்குறிப்பு
ஏற்ற அணியாம். இறைவன் சேக்கிழாரை முற்றிலும் ஏற்றனர் என்பது, முதல் தந்து தம் அடியார்
வரலாற்றைப் பாடச் செய்து, தம்அடி சேர்த்துப் பேர்இன்பம் துய்க்கச் செய்ததாகும்,
இறைவன் பாம்பினையே
ரத்தினாபரணம் என்று கொண்டனர். இதற்குரிய காரணத்தை ஒரு புலவர் வெகு அழகுற நகைச் சுவை தோன்ற.
ஒட்டாக ஒட்டியும்
கால்பொன்னில்
மாப்பொன் உபாயமதாத்
தெட்டா திரான்பணி
செய்யா
திரான்செம்பொன்
மேருவினைக்
கட்டாகக் கட்டிக்கடுகள
வாகக் காட்டவல்ல
தட்டானுக் கஞ்சிஅல்
லோஅணிந்
தான்சிவன்
சர்ப்பத்தையே
என்று பாடியுள்ளனர்.
இம் மூன்றாவது பாடல்
சேக்கிழார்க்கும் சந்திரனுக்கும் உள்ள வேற்றுமையைக் காட்டும் முறையில் அமைந்துள்ளது. இது பேத
உபாயம் அமையப்பாடப்பட்டுள்ளது. பேத உபாயமாவது எதிரியின் உள்ளத்தைக் குழப்பித் தன் வசமாக்கச்
செய்யும் உபாயம் ஆகும்.
(64)
|