பக்கம் எண் :

New Page 1

 

       காப்புப் பருவம்

57

    [வி-எம்]  வேளாளர்கள் கொடுக்கும் இயல்பினர்,  “வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் “  என்று திரிகடுகமும்,  “ எந்நாளம் காப்பர் வேளாளர் காண் “  எனக்கம்பரும்,  ‘ வேளாளர்கள் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளர்‘  என்று திருஞானசம்பந்தரும் இவர்களின் கொடைக் குணத்தைப் போற்றுதல் காண்க.  ஆகவே,  “ தருநின்ற செங்கைத்தலம் “  என அவர்களின் திருக்கரம் சிறப்பிக்கப்பட்டது.

    புலியூர்க் கோட்டம் என முன்னர்க் குறிப்பிடப்பட்டது சிதம்பரத்தலத்தை என்க.  இது புலிக்கால் முனிவரால் பூசிக்கப்பட்ட தலம் ஆதலின், இப்பெயர்பெற்றது.  பின்னைய புலியூர்க்கோட்டம் தொண்டை நாட்டைச்சார்ந்த இருபத்து நான்கனுள் ஒன்று.  புழல் கோட்டம், ஈக்காட்டுக்கோட்டம், மணவில் கோட்டம், செங்காட்டுக் கோட்டம், பையூர்க் கோட்டம், எயில் கோட்டம், தாமல் கோட்டம்,  ஊற்றுக் காட்டுக் கோட்டம், களத்தூர்க் கோட்டம், செம்பூர்க் கோட்டம், ஆம்பூர்க் கோட்டம், வெண்குன்றக் கோட்டம், பல்குன்றக் கோட்டம், இலங்காட்டுக் கோட்டம், கலியூர்க் கோட்டம், செங்கரைக் கோட்டம் படுவூர்க் கோட்டம், கடிகூர்க் கோட்டம், செந்திருக்கைக் கோட்டம், குன்றவட்டான கோட்டம், வேங்கடக் கோட்டம், வேலுர்க் கோட்டம், சேத்தூர்க் கோட்டம், புலியூர்க்கோட்டம் என்பன இருபத்து நான்கு கோட்டங்கள்.  இவற்றுள் ஒன்றாகப் புலியூர்க் கோட்டம், இருத்தலைக் காண்க.  சேக்கிழார் இக்கோட்டத்தைச் சார்ந்த வேளாளர்.

    சிதம்பரமாம் புலியூர்க் கோட்டம், உலகு புகழும்திருத்தலம்.  இது யாவராலும் அறியப்பட்ட உண்மை.  அது போலவே தொண்டைநாட்டுப் புலியூர்க் கோட்டம் சேக்கிழார் பிறந்தருளிய தலம் ஆதலின், அது உலகு ஏத்த நாளும் ஓங்கு புவியூர்க் கோட்டம், எனப்பட்டது.  உலகு என்பது உயர்ந்தோர் மேற்று ஆதலின், அத்தகைய உயர்ந்தோருள் ஒருவரான உமாபதி சிவனார் புலியூர்க் கோட்டத்தைப் புகழும்போது.