New Page 1
கையினை நிறுத்திப்
பாடுபவன், வாக்கி-அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் பயன்களை அமைத்துப் பாடுபவன்,
கழகம்-கூட்டம், சபை, பரவு-போற்றும்.
விளக்கம் : செறிதமிழ் என்றது நிறைந்த தமிழ் என்ற பொருளைத் தரும். தமிழுக்குச் செறிவாவது எல்லாக் கலைகளும் நிறைந்திருத்தலாம்.
தமிழில் எழுத்து,
சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணம் உண்டு. பொருள் இலக்கணம் என்பது ஏனைய
மொழிகளுக்கு இல்லை. மேலும் இம்மொழி, இலக்கண வரம்பில் ஒழுகவல்லது. ஏனைய மொழிகள் அத்தகையன
அல்ல. பொருள் இலக்கணமே தமிழுக்குச் சிறப்புத் தருவது என்பதை “தள்ளாப் பொருளியல்பில் தண்டமிழாய்
வந்திலார், கொள்ளார் இக்குன்று பயன்” என்று பரிபாடல் கூறுதல் காண்க.
இவற்றை உட்கொண்டே
பரஞ்சோதியார்,
கண்ணுதற்
பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த
இப்பசுந் தமிழ்ஏனை
மண்ணிடைச்சில இலக்கண
வரம்பிலா மொழிபோல்
எண்ணிடப்படக் இடந்ததா
எண்ணவும் படுமோ
என்று அறைகூவி அறிவிப்பாராயினர்.
பொருள் இலக்கணம்
இரு பிரிவினையுடையது, ஒன்று அகம் ; மற்றொன்று புறம். அகம் என்பது இக்கால விஞ்ஞான முறையில்
( Science of Love)
என்றும், புறம் என்பது (Science of War)
என்றும் உணரப்படும்.
இவ்வரும்பெரும்
பிரிவினை ஹோமர் என்பாரும்,
“ Two things greater than all things are
One is Love
and the other is War.”
என்று புகழ்ந்துள்ளனர்.
|