பக்கம் எண் :

58

             காப்புப் பருவம்

    பாலாறு வளம்சுரந்து நல்க மல்கும்
        பாளைவிரி மணம்கமழ்பூஞ் சோலைதோறும்
    காலாறு கோலிஇசைபாட நீடும்
        களிமயில்நின் றாடும்இயல் தொண்டை நாட்டு
    நாலாறு கோட்டத்துப் புலியூர்க் கோட்டம்

என்று ஏத்தியுள்ளார்.  எனவே, உலகேத்த என்பது மிகவும் பொருத்தமே.  சிதம்பரப் புலியூர்க்கோட்டம் அளவிலாச் சீர் சிறப்புக்களையுடையது.  கற்றாங்கெரி ஓம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை, செல்வ நெடுமாடம் சென்று சேண்ஒங்கிச்செல்வ மதிதோய் செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்தில்லை, சிட்டர் வாழ் தில்லை, சீலத்தார் தொழுதேத்தும் சிற்றம்பலம், செம்மையாய்த்திகழ்கின்ற சிற்றம்பலம், கற்றவர் தொழுதேத்தும் சிற்றம்பலம், என்று திருஞான சம்பந்தரும், உலகுக் கெல்லாம் திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லை, தேத்தென என்று இசை வண்டுகள் பாடும் சிற்றம்பலம், என்று அப்பர் பெருமானாரும், ‘அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்தம் சிந்தையில் அலர்ந்த திருவளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் என்று சேக்கிழாரும், பகர்வரிய தில்லை மன்றுள் பார்த்தபோது அங்கு என் மார்க்கம் இருக்குதெல்லாம் வெளியே என்ன, எச்சமயத்தவர்களும் வந்து இறைஞ்சா நிற்பர் !  எனத் தாயுமானவரும் போற்றுதல் காண்க.  ஆகவே, தில்லைப் புலியூர்க் கோட்டம், ஓங்கு புலியூர்க் கோட்டமே.

    குன்றத்தூரில் எத்தனையோ பேர்கள் பிறந்தனர் ;  இறந்தனர்.  ஆனால், சேக்கிழார் போன்ற பெருமைக்கு உரியவர் எவரும் இலர்.  ஆகவே, சேச்கிழார் குன்றத்தூரில் ஒப்பிலாதவராய்த் திகழ்ந்தவர். எனவே, அவரை ஒருத்தரை என்றனர்.  திருநின்ற செய்யுள் என்பது,

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
    திருநாவுக் கரையன்தன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
    பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்