பக்கம் எண் :

உண

580

             அம்புலிப் பருவம்

உண்மையினை அரை, கலம், பதக்கு, உரி, நாழி, சாடி, தூதை, உழக்கு, கழஞ்சு, சீரகம், தொடி, பலம், மாவரை, அந்தை,   முதலான அளவைப்  பெயர்களாலும்,    நெய்தலும்,    குவளையும ஆம்பலும் சங்கமும் என்று பரிபாடல் குறிப்பிடும் எண் பெயர்களாலும்.  முந்திரி, காணி, மா, என்ற பின்ன எண் பெயர்களாலும் மற்றும் பல சொற்களாலும் உணரலாம்.

    இரண்டுமுதல் ஒன்பான் இறுதி முன்னர்
    வழங்கியல் மாஎன் கிளவி தோன்றின்

என்ற தொல்காப்பிய நூற்பாவினையும் நினைவுபடுத்திக் கொள்வோமாக.

    தமிழர்கள் கணக்கில் இம்மியும் தவறாது இருந்தனர் என்பதைக் குலோத்துங்க சோழன் காலத்து நிலம் அளக்கப்பட்டு, அதன் அளவைக் குறிப்பிட்டதை, “இறை இலி நீங்கும் நிலம் முக்காலே இரண்டு மாகாணி அரைக் காணி முந்திரி கைக்கீழ் அரையே இரண்டு மா முக்காணிக் கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரிகைக்கீழ் நான்கு மாவினால் இறை கட்டின காணிக் கடன்” என்ற அடிகளில் காணவும்.  இந்த அளவு 1 / 52000 என்பதைக் குறிக்கும்.

    வானநூல்  (Astronomy)  நூல் கலையும் தமிழில் உண்டு.  இக்காலத்தில் அஸ்வனி, பரணி முதலாக நட்சத்திரப்பெயர்கள் காணப்படுகின்றன.  அவற்றை அக்காலத்தில் புரவி, அடுப்பு, ஆரல் முதலிய தமிழ் மொழியால் சுட்டி வந்தனர்.  மேஷராசி முதலானவற்றைக் குறிக்கவந்த நெடுநல் வாடை “ஆடுதலையாக” என்று கூறுதல் காண்க.

    தருக்க நூல்  (Logic )  கருத்தும் தமிழில் இருந்தது.  தருக்கமாவது, தன்னை மிகுத்துக் காட்டுதல் என்க.  இப்பொருட்டாதலை “தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்ந்து” என்று தொல்காப்பியத்திலேயே வருதல் காணவும்.  மேலும், இக் கருத்தை,

    தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்
    பாகுபட மிகுதிப் படுத்தல்