இந
இந்நூலின் முதல்நூல்
பா,
அன்பின் ஐந்திணைக்
களவெனப் படுவது
அந்தணர் அருமறை மன்றல்
எட்டனுள்
கந்தருவ வழக்கம்
என்மனார் புலவர்
என்பதாகும்.
“கரிகுழைத்து எழுதுகண்
செய்ய வாய் வெண்ணகை நலார்” என்பது முரண்தொடையாம், கருமையும், செம்மையும், வெண்மையும் முரண்பட்டமை
காண்க.
கம்பர் இத்தகைய
இடங்களை இன்னமும் இனிதாகப் பாடுவர்.
“சோதிநுதல்
கருநெடுங்கண் துவர்இதழ்வாய்
தரளநகைத் துணைமென்
கொங்கைமாதர்” என்றும்,
“பனிப்பிறையைப் பழித்தநுதல்
பணைத்த வேய்த்தோள்”
“ஏங்கும்இடை தடித்தமுலை
இருண்டகுழல் மருண்டவிழி
இலவச் செவ்வாய்ப் பூங்கொடியீர்”
என்றும் பாடிக் காட்டிய
வரிகளைக் காண்க.
சந்திரனைக் கன்னிப்
பெண்கள் வணங்குதல் மரபு. இதற்குக் காரணம் அவனை வணங்குதலால் விரைவில் திருமணம் ஆகும் என்ற
நம்பிக்கை என்க. இதனை அகப் பொருளில் பிறைதொழுகென்றல் என்ற ஒரு துறையாகக் கூறுவர். அதாவது
தோழி தன் தலைவியின் மேனி வேறுபாட்டை அறிந்து, அவள் ஒரு தலைவனால் காதலிக்கப் பட்டதைக்
குறிப்பால் உணர்ந்து, அதனை நேர்வழியில் கேட்டறிதல் நாகரிகம் அன்று என்று, பிறையினைக் காட்டி
அதனைத் தொழுமாறு தலைவியிடம் கூறுவள். தலைவி கன்னியாகவே இருந்தால் உடனே தொழுவள். ஒரு காதலனைக்
கொண்டனள் ஆயின், பிறையினைத் தொழாள். தனக்குக் கணவன் ஒருவன் அமைந்தபின் அவனைத்தவிர்த்துப்
பிறரைத் தொழுதல் தமிழ்ப் பெண்களின் பண்பு அன்று அன்றோ? “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழு
|