கன
கன்னிப்பெண்கள்
தமக்குவிரைவில் திருமணம் நடக்கப் பிறை தொழுது நிலாச்சோறு படைத்தலை எரு விட்டுச் சந்திரனை
வளர்ப்பதாகக் கவி கூறினர். சேக்கிழார் சிறப்புடைய உழவுத் தொழிலையே எவர்க்கும் காட்டுதலின்,
உழவு தொழில் இவன் காட்டுத் தொழில் என்றனர். சந்திரன் தன்னிடத்து முயலைக் காட்டினால்,
உழவர்கள் முயற்சியாகிய தொழிலைக் காட்டுவர் என்பதை “முயல் இவன் காட்டு தொழில்” என்றனர்.
முயல் என்னும்
சொல், ஈண்டு முயலையும் முயற்சியையும் விளக்கும் சொல்லாக அமைந்துள்ளது. சந்திரனது களங்கத்தை
முயல் எனக் கூறுதல் கவிகள் மரபு. இதனை நாலடியாரில் வரும்,
ஒண்கதிர் வான்மதியம்
சேர்தலால் ஓங்கிய
அங்கண் விசும்பின்
முயலும் தொழப்படூஉம்
என்ற அடிகளால் உணரலாம்.
எருவால் வளர்ச்சியுண்டு
என்று காட்டியவர் சேக்கிழார் என்பதையும், சந்திரா நீ முயலைக் (களங்கமாகிய முயலைக்) காட்டினால்,
இவர் முயற்சியாகிய முயலைக் காட்டுவர் என்பதையும், திரு. பிள்ளை அவர்கள்,
“மொய்த்த
எருஇடுதல் அதனால் வளர்தல்
உழவு தொழில் முயல்இவன்
காட்டுதொழில்”
என்ற வரிகளில்
சுட்டிக்காட்டினர். இங்ஙனம் காட்டியதுடன்,
“இந்நன்றி உள்உணர்ந்
தனைஎன்னில்
வாரா திருப்பை
கொல்லோ”
என்று எடுத்து மொழிந்து,
இதன் வழி தான உபாயத்தை அமைத்துப் பாடியதையும் காண்க.
உழவுத் தொழிலைச்
சேக்கிழார் கைம்மாறு கருதாது செய்பவர் என்பதை “மறிவரிய இந்நன்றி” என்றனர். சந்திரன்
மதியோன் (அதாவது அறிஞன்) என்ற பெயர்
|