பக்கம் எண் :

New Page 1

 

       அம்புலிப் பருவம்

585

பெற்றும், தேய்கிறான்.  இவர் தேயாது கலையால், கவியால் வளர்க்கிறார் என்பது குறிப்பு.

    சேக்கிழாரைக் கவி, கமகன், வாதி, வாக்கி ஆகிய அறிஞர் கூட்டம் போற்றிப் புகழும்.  கவி ஆவான் ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் ஆகிய வகையில் கவிபாடும் கவிஞன்.

    ஆசு கவியாவது எதிரி விரும்பும் வகையில் விரைவில் கவி பாடுதலாகும்.  ஒரு முறை காளமேகத்தை “மன்னு என்று தொடங்கி மலுக்கென்று முடியுமாறு ஒரு வெண்பாவைப் பாடுக” என்று கேட்டபோது உடனே,

    மன்னுதிரு அண்ணா மலைச்சம்பந் தாண்டாற்குத் 
    பன்னும் தலைச்சவரம் பண்ணுவதேன்-மின்னின்
    இளைத்த இடைமாதர் இவன்குடுமி பற்றி
    வளைத்திழுத்துக் குட்டா மலுக்கு

என்று பாடினர்.  இதனை இரட்டையர் பாடியது என்றும் கூறுவர்.

    இதுபோலப் பாடும்கவிஞன் ஆசுகவி ஆவான்.

    மதுரகவி ஆவான் இன்பக் கவிகளைப் பாடுபவன். 

அம்பிகாபதி,

    சற்றே பருத்த தனமே குலுங்கத் தரளவடம்
    துற்றே அசையக் குழைஊசல் ஆடத் துவர்கொள் செவ்வாய்
    நற்றென் ஒழுக நடன சிங்கார நடைஅழகின்
    பொற்றேர் இருக்கத் தலைஅலங் காரம் புறப்பட்டதே

என்று பாடிய பாட்டில் இன்பம் (மதுரம்) இருத்தலைக் காண்க.

    சித்திரக் கவி என்பது ரதபந்தம், கமல பந்தம் முதலானவை.  அதாவது தேர் உருவில், எழுத்துக்கள் அமையவும், தாமரை வடிவில், எழுத்துக்கள் அமையவும் பாடப்படுவது.  அவற்றுள் மாலை மாற்றும் ஒருவகைச் சித்திரக்கவி.  நமதுதிருஞானசம்பந்தர் ஒரு சித்திரக் கவிஞர்.  அவர் பாடிய சித்திரக் கவிகள் பலவற்றுள் மாலை மாற்றும் ஒன்று.  மாலை