New Page 1
“உலகெலாம்” என்று இறைவர் அடி எடுத்துக் கொடுத்ததும், சேக்கிழார் பெருமானார் உடனே,
உலகெ லாம்உணர்ந்
தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி
வேணியன்
அலகில் சோதியன்
அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி
வாழ்த்தி வணங்குவாம்
என்று பாடியதனால்
ஆசுகவி ஆயினர்.
செய்வ தொன்றும்
அறியாது
சிந்தை மகி்ழ்ந்து
களிகூர்ந்தென்
ஐயன் அணைந்தான்
எனை ஆளும்
அண்ணல் அணைந்தான்
ஆரூரின்
சைவன் அணைந்தான்
என் துணையாம்
தலைவன் அணைந்தான்
தரணிஎலாம்
உய்ய அணைந்தான்
அணைந்தான்என்
றோகை முரசம்
சாற்றுவித்தார்
என்று பாடியுள்ள பாடல்
சேக்கிழார் மதுரகவி பாடும் மதுர கவி என்பதைத் தெரிவிக்கிறது. சேக்கிழார் பெருமானாருக்குச்
சித்திரகவி பாடவேண்டிய வாய்ப்பு நேர்ந்திலது. நேர்ந்து இருக்குமாயின் அதனையும் பாடி
இருப்பார். மேலே கூறிய ஆசு மதுரம் பாடும் அவர்க்குச் சித்திரக் கவி பாடுதல் கடின ஆகுமோ?
சித்திரம் என்னும்
சொல்லுக்கு அழகு என்னும் பொருள் இருத்தலின், சித்திரக் கவி என்னும் தொடர் அழகிய கவியும்
ஆகும். இக்காரணத்தினால் சேக்கிழார், சித்திரக் கவிபாட வல்லவர் என்றும் கொள்ளலாம்.
அத்தகைய சித்திர (அழகிய) கவிகளை அங்கம் பூம்பாவையின் வளர்ச்சியினைக் கூறுமிடத்துக் காணலாம்.
தளரும் மின்னின்அங் குரம்எனத்
தமனியக் கொடியின்
வளர்இ ளம்தளிர்க்
கிளைஎன மணிகினர் ஒளியின்
அளவில் அம்சுடர்க்
கொழுந்தென அணைவுறும் பருவத்
திளவ னப்பிணை அனையவர்க்
கேழியாண் டெய்த
|