| 
அழக
 
அழகின் முன்இளம்  பதம்என 
அணிவிளக் கென்ன 
விழவு கொண்டெழும் பேதையர் 
உடன்விளை யாட்டில் 
கழலொ டம்மனை கந்துகம் 
என்றுமற் றினைய 
மழலை மென்கிளிக் குலம்என 
மனையிடை ஆடி 
பொற்றொ டிச்சிறு மகளிர்ஆ 
யத்தொடும் புணர்ந்து 
சிற்றில் முற்றவும் 
இழைத்துடன் அடும்தொழில் சிறுசோ 
றுற்ற உண்டிகள் பயின்றொளி 
மணிஊசல் ஆடி 
மற்றும் இன்புறு வண்டல்ஆட் 
டயர்வுடன் வளர 
என்பன சித்திரக் கவிகள் 
எனலாம். 
    ஆகவே, சேக்கிழார் 
சித்திரக் கவிஞரும் ஆவார்.  அவர் வித்தரக் கவி என்பதற்கு அவர்தம் பெரிய புராணமே தக்க 
சான்று. 
    தொண்டர்களைப் பற்றிச் 
சுந்தரர் பாடிய பாடல்கள் பதினொன்று, நம்பியாண்டார் நம்பிகள் பாடியுள்ள பாடல்கள் எண்பத்தைந்து.  
சேக்கிழார் பாடியுள்ள பாடல்கள் நாலாயிரத்து இருநூற்று இருபத்தாறு.  இவ்வாறு விரித்துச் சேக்கிழார் 
பாடி இருத்தலின், அவர் வித்தாரக் கவிஞர் ஆவார். 
        வீதிகள் விழவின் 
ஆர்ப்பும் விரும்பினர் 
            விருந்தின் 
ஆர்ப்பும் 
        சாதிகள் நெறியில் 
தப்பா 
            தனையரும் அனையில் தப்பார் 
        நீதிய புள்ளும் 
மாவும் 
            நிலத்திருப் 
புள்ளும் மாவும் 
        ஓதிய எழுத்தாம் 
ஐஞ்சும் 
            உறுபிணி வரத்தாம் 
அஞ்சும் 
என்ற பாடலில், வீதிகள் 
விழவின் ஆர்ப்பு என்றதால் மக்கள் செழித்து, திருவிழாக்களை நடத்தினார் என நாட்டு வளத்தையும் 
விரும்பினர் விருந்தின் ஆர்ப்பு என்றதனால், நாட்டில் உள்ளவர்கள் வந்த  விருந்தினரை  உபசரித்து  இனிவரும்  விருந்தினரை  எதிர்  நோக்கி இருப்பர் என்ற நாட்டு மக்களின் விருந்தோம்பும் பண்பினையும், 
அந்தணர், அரசர் வணிகர் 
 |