பக்கம் எண் :

என

590

             அம்புலிப் பருவம்

என்று பல பாக்களைப் பாடி வாத முறையில் கவிபாடும் திறனும் பெற்றதனால், இவர் வாதி என்ற புலமைக்கும் நிலைக் களனாய் இருத்தலை உணர்க.

    பெரிய புராணத்தில்  நூற்  பயனாகிய  அறம்,  பொருள்,  இன்பம்,  வீடு  என்னும் பொருள்கள் அமையப் பாடி இருப்பதையும் பல இடங்களிலும் காண்கிறோம்.  அப்பூதி அடிகளார் புராணத்தில் அவரது அறத்தைப் பற்றிய குறிப்பை,

        படிநிகழ் மடங்கள் தண்ணீர்ப்
            பந்தர்கள் முதலாய் உள்ள
        முடிவிலா அறங்கள் செய்து
            முறைமையால் வாழும் நாளில்

என்றும், பொருள் குவிந்த நிலையை,

        அரிதரு செந்நூல் சூட்டின்
            அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்
        பரிவுறத் தடிந்த பன்மீன்
            படர்நெடும் குன்று செய்வார்
        சுரிவளை சொரிந்த முத்தின்
            சுடர்ப்பெரும் பொருப்பு யாப்பார்
        விரிமலர்க் கற்றை வேரி
            பொழிந்திழிவெற்பு வைப்பார்

என்றும், இன்ப நிலையினைக் குறித்து,

        தோடலர்மென் குழல்மடவாள்
            துணைக்கலச வெம்முலையுள்
        ஆடவர்தம் பணைத்தோளும்
            அணிமார்பும் அடங்குவன

என்றும், வீட்டின்பத்தினைக் குறித்து,

        துன்றும்புலன் ஐந்துடன் ஆறு
            தொகுத்த குற்றம்
        வென்றுஇங்கிது நன்னெறி சேரும்
            விளக்கம் என்றே