பக்கம் எண் :

 

       அம்புலிப் பருவம்

593

திருநாவலவூரன் அவன்”  என்றும்  “நாவலர் கோன் ஆரூரன் உரைத்த தமிழ்”  என்றும் குறிப்பிட்டதைக் காண்க.

    திருநாவலூர் திருத்தலம் விழுப்புரம் திருச்சிராப்பள்ளி இரயில் மார்க்கத்தில் பரிக்கால் ரயில்வே ஸ்டேஷனுக்கு இரண்டு கல் தொலைவில் உளது.  இத்தலத்தில் சுக்கிரன் பூசித்துப் பேறு பெற்றனன். சுந்தரர் திரு அவதாரம் செய்த தலம்.  இத்தலத்தைத் திருநாம நல்லூர் என்றும் கூறுவர்.  இங்கு வரதராசப் பெருமாள் கோயிலும் உண்டு பலவகைப் பல்லவச் சிற்பங்களை இங்குக் காணலாம்.  இங்குள்ள சுந்தரர் திருவுருவத்தைக் காண்பது கண்ணுக்குப் பெரு விருந்தாகும்.  இவரை வளர்த்த நரசிங்கமுனையரையர் உருவமும் அழகுடையது.  இறைவன் திருப்பெயர் திருநாவலேஸ்வரர்.  இறைவியின் திருப்பெயர் சுந்தரநாயகி அம்மையார்.

    சுந்தரர் செய்த அற்புதங்கள் பல. அவற்றுள் கூனையும் குருடையும் ஒழித்தமையுமாகும்.  இதனைச் சேக்கிழார்,

        தேனும் குழலும் பிழைத்ததிரு
            மொழியாள் புலவி தீர்க்கமதி
        தானும் பணியும் பகைதீர்க்கும்
            சடையார் தூது தரும்திருநாள்
        கூனும் குருடும் தீர்த்தேவல்
            கொள்வார் குலவும் மலர்ப்பாதம்
        யானும் பரவித் தீர்க்கின்றேன்
            ஏழு பிறப்பின் முடங்குகூன்

என்று பாடிச் சுந்தரரை வணங்கியுள்ளனர்.  நம்பியாண்டார் நம்பிகளும்,

        கூற்றுக் கெவனோ புகல்திரு
            ஆரூரன் பொன்முடிமேல்
        ஏற்றுத் தொடையலும் இன்அடைக்
            காயும் இடுதரும்அக்