New Page 1
கோற்றொத்துக்
கூனனும் கூன்போய்க்
குருடனும் கண்பெற்றமை
சாற்றித் திரியும்
பழமொழி
யாம்இத் தரணியிலே
என்று பாடிப் பரவியுள்ளனர்.
அதாவது சுந்தரர் பரவையார் மாளிகையில் வாழ்கையில், தமக்குத் திருமாலை கட்டித்தரும் தொண்டும்,
அடைக்காய் அளிக்கும் தொண்டும் செய்த பிறவிக் குருடனாகியும், கூனாகியும் இருந்தவர்கன் குருட்டையும்,
கூனையும் நீக்கி அருள் செய்தார் என்பதாம்.
சீகாழியார் என்பார்
திருஞானசம்பந்தர். அவர் சீர்காழியில் பிறந்தமையின் சீகாழியார் எனப்பட்டனர். சீர்காழிக்குரிய
பன்னிரண்டு திருப்பெயர்களுள் சண்பை என்பதும் ஒன்று. ஆகவே இவரது அவதாரத்தைக்
குறிப்பிடும்போது “தவம் பெருக்கும் சண்பையிலே தாவில் சரா சரங்கள் எல்லாம் சிவம்
பெருக்கும் பிள்ளையார் திருவவதாரம் செய்தார்” என்று சேக்கிழார் மொழியால் உணர்கிறோம்.
திருஞானசம்பந்தர் காழிநகரினர் என்பதை மேலும், “காழியர் தவமே” என்று போற்றியதனாலும் அறியலாம்.
திருஞான சம்பந்தர், தாம் காழி நகரினர் என்பதைத் தமது திருக்கடைக் காப்புச் செய்யுள்களில்
குறிப்பிட்டுள்ளனர். “காழியுள் ஞான சம்பந்தன்” “காழிப்பூசுரன் ஞானசம்பந்தன்” என்று வருவன
காண்க.
சீகாழித் தலம் திருஞானசம்பந்தர்
பிறந்தருளிய தலமாகும். இது சீகாழி இரயில்வே ஸ்டேஷனுக்கு இரண்டு கல் தொலைவில் உளது.
இறைவன் பிரம்மபுரிசுரர் என்றும், இறைவி திருநீல நாயகி என்றும் கூறப்படுவர். இத்தலத்தின்
கோயில் அடுக்குமலைபோல் அமைந்துளது. உச்சியில் ஒரு தோணியில் பெரிய நாயகர் பெரிய நாயகி
வீற்றிருக்கும் திரு உருவங்களைக் காணலாம். தோணியப்பர் சிகரத்திற்குத் தெற்குப் பக்கத்தில்
சட்டைநாதர் கோயில் உளது. இப் பெருமானார்க்கு வெள்ளிக்கிழமை தோறும் இரவு பதினோருமணிக்குப்
புனுகு சட்டம் சாத்தி விஷேட வழிபாடு நடப்
|