ப
பதை இன்றும் காணலாம்.
திருஞானசம்பந்தருக்குத் தனிக் கோயில் உண்டு. சித்திரைமாதப் பெருவிழாவின் இரண்டாம் நாள்
விழா, ஞானப்பால் விழா என மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
திருஞானசம்பந்தரும்
கூன் பாண்டியனது கூனைப் போக்கியுள்ளனர். “வாழ்க அந்தணர்” என்னும் பாடலில் “வேந்தனும் ஓங்குக”
என்று குறித்தபோது அவன் கூன் நீங்கியது. இவனது கூன் நீக்கப்பட்டதைக் குறிப்பிட வந்த சேக்கிழார்,
எம்பிரான் இவனே
எல்லாப்
பொருளும்என்
றெழுதும் ஏட்டில்
தம்பிரான்
அருளால் வேந்தன்
தன்னைமுன் ஓங்கப்பாட
அம்புய மலரான்
மார்பன்
அனபாயன் என்னும்
கீர்த்திச்
செம்பியன் செங்கோல்
அன்னத்
தென்னன்கூன்
நிமிர்ந்த தன்றே
என்று பாடியும் உள்ளார்.
சேக்கிழார் சந்திரனுக்குரிய
வளைவை (கூனை) ஒழிப்பார் இவர் செய்யுளின் உறுப்புக்களில் ஒன்றான கூனையும் அமைக்காது பாடியவர்
என்ற சிறப்பை ஈண்டுப் பிள்ளை அவர்கள் “செய்யுளினும் உறவைத்திலன் கூன்” என்றனர். கலிப்
பாவில் தரவு, தாழிசை, அராகம், அப்போதரங்கம், தனிச்சொல், சாரிதகம் என்ற உறுப்புக்கள்
உண்டு. தனிச்சொல், என்பது விட்டிசை, கூன், தனிநிலை என்றும் கூறப்படும். இக்கூன் பெரிதும்,
சுரிதக உறுப்புக்கு முன் நிற்கும். “பொருளொடு அடிமுதல் நிற்பது கூன்” என்பது யாப்பருங் கலக்காரிகை
என வாங்கு,
பாணியும் தூக்கும்
சீரும் என்றிவை
மாணிழை அரிவை
காப்ப
வாணமில் பொருள்எமக்கு
அமர்ந்தனை ஆடி
|