பக்கம் எண் :

New Page 1

 

       அம்புலிப் பருவம்

597

“அப்படியானால் யானும் சைவமரபு பற்றிச் சபாநாயகர் துதியை முன் வைத்ததில் தவறுண்டோ?” என்றபோது ஓது வார்களும் ஏனையோரும் பெட்டிப் பாம்புபோல் அடங்கி விட்டனர்.  இது சிவஞான முனிவரது நாவன்மையினைக் காட்டுதலின் அவர் நாவலர்தாமே !  அத்தகைய நாவலர் “சேக்கிழான் அடி சென்னி இருத்துவாம்” என்று சேக்கிழாரைப் பரவி உள்ளனர். இதனால் நாவலோர் பரவு குன்றை நகர் ஆளிஎன்றனர்.

(69)

9.    தலைமயிர் பறித்தும்அரை யில்பாய் உடுத்தும்
           தழைத்திரள்கை வைத்தும்உழலும்
       சழக்கர்மத மாம்களங் கம்பரவல் நீக்கிஉயர்
           சைவநிலை எங்கும் ஆக்கும்
       நிலைவுடைய தம்பிரான் நின்களங் கம்போக்கி
           நிகழ்புனித மேஆக்குவான்
       நீடும்இதன் மேல்உறுதி என்னைகொல் நினக்கின்னும்
           நேர்அளப் பரியசான்றோர்
       கலைபலவும் ஓர்உருக் கொண்டனையர் அருள்நோக்கு
           காதலார் நிற்கவும்நினைக்
       கடைக்கணித் தாடவா என்றழைத் ததுபெருங்
           கருணையே கங்கையினும்மிக்
       கலைமருவு புனல்வளக் குன்றைநகர் ஆளியுடன்
           அம்புலீ ஆடவாவே
       அருளுருத் தேசுபொலி அருள்மொழித் தேவனுடன்
           அம்புலீ ஆடவாவே

    (அ. சொ.)  அரை-இடுப்பு, தழைத்திரள்-அடர்ந்த மயில் பீலிக்கற்றை, சழக்கர்-கீழ்களாகிய சமணர், பொய்யர் குற்றமுடையவர்கள், களங்கம்-மாசு, தம்பிரான்-சேக்கிழார்பெருமானார், புனிதமே-பரிசுத்த நிலையே, உறுதி-நன்மை, என்னைகொல்-என்ன இருக்கிறது? அளப்பரிய-அளந்து சொல்லுதற்கு அருமையான, சான்றோர்-அறிவால்