பக்கம் எண் :

6

                              பாயிரம்

தின்கண்ணே தொக்கு நிற்கும் “  என்று எழுதிப் போந்தார்.  உரை ஆசிரியராம் உளம் கூர்ப் பெருமை  இளம்பூரணர்  பெயரெச்சங்கள்  காலம் மறைந்து வருவன”  என்று உரை வகுத்தனர்.

    நன்னூலார் வினைத் தொகை இலக்கண விதி கூறும் போது,” காலம் கரந்த பெயரெச்சம் வினைத் தொகை” என்று நூற்பா செய்தனர்.  இதற்கு உரை எழுதிய சங்கர நமச்சிவாயர் “காலம் பற்றிப் புடை பெயர வினை உருபாகியதம் இறுதிகள் தொக்கு நிற்பச் செய்வதாதி அறுபொருள் பெயராகிய தம் எச்சங் கொண்ட பெயரெச்சங்கள் வினைத் தொகைகளாம்” என்று எழுதினர்.  இவை அனைத்தையும் உட்கொண்டே “ வினை உருபு தொக” எனப்பட்டது.  மலர் சிலம்படி என்பது” உலகெலாம்” என்பதோடு பொருத்தப் பொருள் கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவு படுத்தவே “அம்முத லொடொன்ற” எனப்பட்டது.  “அம் முதல் என்பது இறைவன் தந்த “உலகெலாம்”எனும் முதல்.  “ நான்கன் அடி ஆதி செய்து” என்பது, உலகெலாம் என்னும் பாட்டின் நான்காவது அடியின் முதலில் மலர் என்னும் சொல்லை அமைத்து என்றவாறு.  நான்கன் அடி ஆதி செய்து என்னும் தொடர்க்குச் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆதியானவற்றை நான்காவது அடியில் அமைத்து உணர்த்தி என்று பொருள் கூறினும் அமையும்.  “மலர் அடி” என்பது ஞானத்தையும், “  சிலம்படி” என்பது யோகத்தையும், “அடிவாழ்த்தி” என்பது கிரியையையும், “ அடி வணங்குவாம்”என்பது சரியையையும் உணர்த்தி நின்றவாறு அறிக.  பின்னால் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற சொற்களை அமைத்துப் பாடப்பட்ட பாடல் வருதலின் ஆண்டு அவை விளக்கப்படும்.

    இறைவனை அடைதற் குரிய வழி வகைகளில் சற்புத்திர மார்க்கம், தாசமார்க்கம், சகமார்க்கம், ஞானமார்க்கம் என்பனவும் கூறப்படும்.  இம் முறையில் நடந்து காட்டியவர்கள் நம் சைவ சமயகுரவர்கள் நால்வர்கள்.  இறைவனை