பக்கம் எண் :

New Page 1

600

             அம்புலிப் பருவம்

நோக்கிற்கு எதிர்பார்த்து நிற்பர். அவர்களையும் பாராது விடுத்துச் சந்திரனைக் கடைக்கண்ணால் கண்டு ஆடவா என்றது சேக்கிழார் மாட்டு இயற்கையில் அமைந்த கருணையாகும் என்று பிள்ளை அவர்கள் சேக்கிழாரது குணப்பண்பைச் சந்திரனுக்குக் கூறுகின்றனர்.  இறுதியில் குன்றை நகர் நீர்வளத்தை உயர்வு நவிற்சி அணி அமையப் பாடியுள்ளனர். 

    கங்கை நதி புண்ணிய நதியே. என்றானும், பிணங்கள் மிதக்கும் ஆறாதலின் அதனது புனிதம்  கெடுகிறது.   ஆகவே,  “கங்கையினும்”  என்று  உம்மை  கொடுத்து  பாடினர்.  “கங்கையின் புனிதமாய காவிரி” என்றார் ஆழ்வர்.

    ஏழு, எட்டு, ஒன்பது எண்ணுள்ள பாடல்கள் தான உபாயத்தால் சந்திரனை அழைத்ததை அறிவிப்பன.  தான உபாயமாவது உதவி தந்து அழைத்தலாகும்.

(70)  

10.    காதலொடு வாஎன் றழைத்தவுடன் வந்திலன்
           கருதியதென் என்றுசற்றே
       கறுக்கச் சிவத்தல்கூ டாதுநாண் பூண்டான்
           களங்கத் திறத்தின்என்று
       போதலுற யாம்புகன் றேம்இனி முனிந்திடில்
           போக்குவே றில்லையாகும்
       புன்மையான் இவன்என்றொர் கவிகூறின் முக்கண்
           புராதனனும் உனைவெறுப்பன்
       வீதலுற லேஅன்றி வேறொன்றும் உள்ளதுகொல்
           விளைகுவ தனைத்தும்ஓர்ந்தும்    
       மேயினேன் மேயினேன் என்றடையின் நலம்உண்டு
           மேல்உலக வாழ்க்கையோர்மிக
       காதலுற விழைதரும் குன்றைநகர் ஆளியுடன்
           அம்புலீ ஆடவாவே
       அருளுருந் தேசுபொலி அருள்மொழித் தேவனுடன்
           அம்புலீ ஆடவாவே.