New Page 1
போது அதனைக் காலால்
தள்ளிக் கலைத்துவிட்டு விளையாடும் விளையாட்டாகும், ஆண்பாற் சிறுவர்கள் இவ்வாறு காலால் சிதைத்து
விளையாடிய செய்தியினைக் கலித்தொகையிலும் காண்கின்றோம். இதனை,
சுடர்த்தொடீ
கேளாய் ! தெருவில் நாம்ஆடும்
மணல்சிற்றில்
காலில் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரிப்பந்து
கொண்டோடி
நோதக்க செய்யும்
சிறுபட்டி
என்று கலித்தொகை
கழறுதல் காண்க. இது சிறுவனது இரண்டாம் ஆண்டில் நிகழும் நிகழ்ச்சி என்பர்.
திருவீதிகள் நீண்டு
இருப்பது சிறப்பாதலின் வாரும் என்றனர். வார் நீண்ட என்ற பொருளது என்பதை “வாராரும் கடல்”
என்ற இடத்துக்காண்க. விழா அறாவீதி ஆதலின் திருவீதி ஆயிற்று. நித்திலங்கட்குச் சில குறைகள்
உண்டு. இதனை முன்பே கூறியுள்ளோம். அக்குற்றங்கள் அமையா நித்திலம் என்பார் ‘வண்ணித்திலம்’
என்றனர். சிற்றில்லை மணலால் அமைப்பது வழக்கம். இங்கு அமைத்த சிற்றில் முத்தால் ஆனதாம்.
இதனால் நாட்டின் வளன் கூறிய தாயிற்று. இவ்வாறு சிறப்பிப்பது வீறுகோள் ஆணியின் பால்படும்.
இவ்வாறு பெண்கள் நித்திலத்தாலும், மணியாலும் சிற்றில் இழைத்தனர் என்பதை,
கழுவா மணியும் நிலவுவிரி
கதிர்நித் திலமும்
உமைஅம்மை
கண்ணில் உறுத்த
அடிகேள்நின்
காலில் உறுத்தல்
கடன் அன்றால்
என முத்துக்குமாரசாமி
பிள்ளைத் தமிழில் வருதல் காண்க.
சிறுபறைப் பருவத்தை
முன்கூறிச் சிற்றில் சிதைத்தலைப் பின கூறும் வழக்கமும் உண்டு. அதுபோது சிறுபறைப்
|