ப
பருவச் செயல் இரண்டாம்
ஆண்டுச் செயலாகவும், சிற்றில் பருவச் செயல் மூன்றாம் ஆண்டுச் செயலாகவும் அமையும், இதனை
“இரண்டாம் ஆண்டில் சிறுபறை கொட்டலும், மூன்றாம் ஆண்டில் சிற்றில் சிதைத்தலும்” என்று பிங்கலந்தை
அறிவிக்கின்றது.
சிறுமியர்கள்
சிற்றில் இழைத்துச் சிறு சோறு அட்டு விளையாடியதைத் திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்,
பொன்னின் மணக்கும்
புதுப்புனலில்
புடைசூழ் பணிலம்
முத்தெடுத்துப்
புறக் கோட்டகம்
உண்டாக்கிவலம்
புரியைத் தூதைக்
கலம்அமைத்துக்
கன்னி மணக்கும்
கழனியில்செங்
கமலப் பொகுட்டு
முகைஉடைத்துக்
கக்கும் செழுந்தேன்
உலைஏற்றிக்
கழைநித் நிலவல்சி
யைப்புகட்டிப்
பன்னி மணக்கும்
புதுப்பொழிலில்
பலபூப் பறித்துக்
கறிதிருத்திப்
பரிந்து சிறுசோ
றடும்அருமை
பாராய் அயிரா
வதப்பாகன்
சென்னி மணக்கும் சேவடியால்
சிறியேம்
கிற்றில் சிதையேலே
திரைமுத் தெறியும்
திருச்செந்தூர்ச்
செல்வா
சிற்றில் சிதையேலே
என்று பாடியிருப்பதையும்
ஈண்டுக் காண்க.
ஒன்றில் தம்
கருத்தைச் செலுத்தி, அதில் ஆழ்ந்திருப்பவர்கள் தம்மை நோக்கி மிகப் பெரியவர்கள் வரினும்,
கவனியாதிருத்தல் இயல்பு. அப்படி இருத்தல் தவறே ஆகும். அதனால் தீங்கே வரும். இந்த உண்மை
இந்திரன் தனது குல குருவாம் வியாழபகவான் வந்தபோது ஏழாது, வரவேற்காது இருந்ததால் சாபம் ஏற்றான்
என்பதைத் திருவிளையாடற் புராணத்தால் அறிகிறோம். இதனை,
|