பக்கம் எண் :

New Page 1

612

             சிற்றில் பருவம்

    செந்நெல்   வளர்ச்சி   யானை   உயரும்   வளரும்   எனக் கூறி நெல் வளத்தை உணர்த்தியுள்ளனர்.  இதனை,

    சேலு லாவித் திரியும் நிதிப்புனல்
    மாலி யானை மறையக் கதிர்த்தலைச்
    சாலின் நீடித் தழைத்து விளைவயல்
    காலின் ஓடிக் கடிது விழுமரோ

என்ற புரபுலிங்க லீலைப்பாடலாலும் தெளியவும். “தொண்டை எடுப்பு” என்பது யானை தன் துதிக்கையினைத் தூக்கும் எடுப்பை உணர்த்துவதாம்.  யானை மறைவதே அன்றி யானையின் தொண்டையும் (துதிக்கையும்) மறையும் அளவு நெல் வளர்ந்திருந்ததென்றால், நாட்டின் பொருள் வளத்தைப் புகலவும் வேண்டுமோ? இங்ஙனம் புகழ்ந்தது உயர்வு நவிற்சி ஆகும்.                                                            

(73)

3.     வெய்ய அமையும் பரசமய
           விருப்பம் சுமந்த திருவில்லார்
       வினையைச் சிதைத்தி அவர்மாயை
           வீயச் சிதைத்தி ஆணவமும்
       நையச் சிதைத்தி இவைசிதைத்தால்
           நாடும் புகழ்புண் ணியம்இரண்டும்
       நாளும் நினக்கு மேல்மேலாம்
           நகையாம் எங்கள் செயல்சிதைத்தல்
       வையம் வியக்கும் செங்கரும்பும்
           வாழைக் குலையும் பசுங்கமுகும்
       வயங்கும் இளநீர் இலாங்கலிபும்
           மகவான் அவைக்கோர் அலங்காரம்
       செய்ய உயர்தண் டகநாடா
           சிறியேம் சிற்றில் சிதையேலே
       செல்வம் செருக்கு குன்றையருள்
           செல்வா சிற்றில் சிதையேலே.