பக்கம் எண் :

New Page 1

 

       சிற்றில் பருவம்

613

    [அ. சொ.]  வையம்-உலகம், கமுகு-பாக்குமரம்-இலாங்கலி-தென்னை, மகவான்-இந்திரன், அவைக்கு-சபைக்கு, வெய்ய-கொடிய கொள்கைகளே, திரு-மோட்சத்திரு, அருள் திரு, ஞானத்திரு முதலியன, வினையை-பாவங்களை, வீய-அழிய, நைய-அழிய,

    விளக்கம் : பரசமயம் என்பது ஈண்டுச் சமண பௌத்த சமயங்களையே ஆகும்.  அவர்கள் பால் சில கொடுமைகள் இருப்பனவாக நூல்களின் வாயிலாக அறிகிறோம்.  “நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற காற்றுக்கொள்ளவும் நில்லா அமணர்” “வேதவேள்ளியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமணொடு தேரர்” “ஆகமச் செல்வனாரை அலர் தூற்றல் காரணமாகக் கூகையம் மாக்கள் குவிமுலையார் தம்முன்னே நாணமின்றி உழல்பவர்” என்று திருமுறைகளில் வருதல் கொண்டு இவர்களது சமயத்தை “வெய்ய அமையும் பரசமயம்” என்றனர்.

    திருவாவது அருள்திருவாகும்.  திருவெண்ணீறு அணிவதும் திருவாகும். இது குறித்தே அப்பர் “திருவெண்ணீறு அணியாத திருவில் ஊர்” என்றனர். மாயை, ஆணவம் இன்ன என்பதுபற்றி முன்பே விளக்கப்பட்டது, தீயவர்களைச் சிதைப்பது அறமாகும்.  இதனை நாயனாரும்,

“கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
 களைகட் டதனொடு நேர்”

என்று கூறியதும் காண்க.

    நெடுமாறனும் தீயர்களை ஒறுத்துச் சினந்தனன் என்பது

‘மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித்
துன்னிய வாதில் ஒட்டித் தோற்றஇச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பால் அநுசிதம் முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவில் ஏற முறைசெய்க என்று கூற’