4
4. பொருந்து நிலத்தே
ரால்உழுதல்
புகழாம் விதியும்
அதுவாகும்
பொருந்தா நிலங்கா
லால்உழுதல்
புகன்ற இரண்டுள்
ஒன்றாமோ
வருந்தும் அரிய திருவடியும்
மண்டு புழுதி
அடையும்நறு
மலர்தோய்
பவைமற் றிதுதோய்தல்
வழக்கோ கண்டார்
சருப்பாரோ
முருந்து முறுவல்
மடமாதர்
முயங்கும்
பொழில்வாய்க் கருஞ்சுரும்பர்
முரலா நின்ற பண்கேட்டு
முகத்து
கொடுக்கும் பொன்காசில்
செருந்து மலர்தண்
டகநாடா
சிறியேம்
சிற்றில் சிதையேலே
செல்வம் செருக்கு
குன்றைஅருள்
செல்வா
சிற்றில் சிதையேலே.
(அ. சொ.)
முருந்து-மயில் இறகின் அடிப்பகுதி போன்ற. முறுவல் - பற்களையுடைய, மடமாதர் - இளம் பெண்கள்,
முயங்கும்-சேரும், பொழில்வாய்-சோலையில் சுரும்பர்-வண்டுகள், முரலாநின்ற-ஒலித்துக் கொண்டிருந்த,
பண்-இசை, காசின்-காசைப்போல, செருந்தும்-செருந்தி மலர், விதி-முறை, கடமை, நூலின்
கொள்கை, உழுதல்-சிதைத்தல், புகன்ற-மேலே சொல்லிய, இரண்டுள்-புகழ், விதி என்ற இரண்டினுள்,
அரிய-அருமையான, திரு-சிறந்த. மண்டு-மிகுந்து, புழுதி-மண், நறு-வாசனையுள்ள, இது-புழுதி, வழக்கோ-முறையோ,
நீதியோ,
விளக்கம் :
நிலத்தை ஏரால் உழுதல் புகழ்தரும் செயலாகும். புகழ்மட்டும் அன்றிப் பொருளுக்கும் இடனாகும்
இதனை அறிந்தே எவரையும் சும்மா சோம்பி இருக்கவிடாது நிலத்தை உழுது பயிரிட்டு வாழ வேண்டும்
என்றே
|