| 
மன
 
        மன்னுடை மன்றத்து 
ஓலை தூக்கினும் 
        தன்னுடை ஆற்றல் 
உணரார் இடையினும் 
        மன்னிய அவைஇடை வெல்லுறு 
பொழுதினும் 
        தன்னை மறுதலை பழித்த 
காலையும் 
        தன்னைப் புகழ்தல் 
தகும்புல வோர்க்கே 
என்ற பவணந்தியார் கூற்றைக் 
காண்க. 
    ஈண்டுச் சேக்கிழார், 
“மன்னிய அவை இடை வெல்லுறு பொழுதினும்” என்ற முறையில் புகழ்ந்து கொண்டதாகக் கொள்ளலாம். 
இவ்வாறு புலவர்கள் தம்மைப் புகழ்ந்து கொண்ட இடங்கள் பல உண்டு.  திருக்காளத்தி நாதர் உலா 
ஆசிரியர் சேறை கவிராஜ பிள்ளை அவர்கள், 
    “செந்தமிழோர் தங்கள்இரு 
சீபாத தூளிபொர 
     வந்த புலவோர்தம் 
மார்பாணி-கந்தன் 
     அடிகையா ரப்பரவும் 
ஆசுகவி ராசன் 
     கடிகையார் கோலா 
கலன்” என்றும், 
    என்பேர் வண்ணக் 
கட்சியதன்றி 
        எதிர்த்தவர் 
மார்பாணி 
    இந்தத் தேசப் 
புலவர் மனத்துக்கு 
        இடிஎன வந்தோன்காண் 
என்றும், “ஏடாயிரம் 
கோடி எழுதாது தன் மனத்தே எழுதிப்படித்த விரகன் இம சேது பரியந்தம் எதிரிலாக் கவி வீரராகவன்” 
என்று அந்தகக்கவி வீரராகவ முதலியார் கூறியிருப்பதையும் காண்க. 
    மேலும் வேண்டுவார் 
அவ்வப்போது புலவர்கள் பாடிய சீட்டுக் கவிகளில் அறிந்து கொள்ளவும். 
    சிந்தாமணி என்பது 
தெய்வ லோகத்தில் உள்ள  ஒரு  கல்.   அது  வேண்டியதைத் தரவல்லது அதுபோலச் சேக்கிழார் 
பெருமானாரும் தொண்டர் புராணம் பாடி, அதில் யார் யார் எதை விரும்புகின்றனரோ அவற்றையெல்லாம் 
தரும் முறையில் பாடி இருத்தலின், அவரைச் சிந்தாமணி என்றனர்.  அவர் அவர் உவக்கும் முறையில், 
வேண்டும் முறையில் 
 |