பக்கம் எண் :

New Page 1

626

             சிற்றில் பருவம்

பெரிய புராணம் விடயங்களைத் தரும் என்பது முன்பே கூறப்பட்டது. என்றாலும், மீண்டும் நினைவு கொள்வதற்குச் சிந்தாமணி போன்ற தொண்டர் புராணம் வேண்டியதைத் தரும் என்பதற்கு ஓர் இடத்தைக் காட்டி மேலே செல்வோமாக.  புராணம் என்றதும் வெறுங் கட்டுக் கதைகளைக் கூறிச் செல்லும் என்று கரைகிறவர்களும் இந்நாட்டில் உண்டு.  அவர்கள் பெரிய புராணத்தை அவ்வாறு கருத முடியாது.  பெரிய புராணம் ஒரு வரலாற்று நூல்.  ஆகவே, வரலாற்றறிவுடையார்க்கு வேண்டிய குறிப்புக்களையும் பெரிய புராணம் தன்னகத்தே கொண்டுள்ளது.  இதற்குரிய சான்றுகளைப் பெரிய புராணம் கொண்டு நிலை நிறுத்துவோமாக.  மூர்த்தி நாயனார் புராணத்துள்,

    கானக் கடிசூழ் வருகக்கரு நாடர் காவல்
    மானப் படைமன்னன் வலிந்து நிலம்கொள் வானாய்
    யானைக் குதிரைக் கருவிப்படை வீரர் திரண்ட
    சேனைக் கடலும் கொடுதென்றிசை நோக்கி வந்தான்

    வந்துற்ற பெரும்படை மண்புதை யப்ப ரப்பிச்
    சந்தப்பொதி யில்தமிழ் நாடுடை மன்னன் வீரம்
    இந்தச்செரு வென்றுதன் ஆணை செலுத்தும் ஆற்றால்
    கந்தப்பொழில் சூழ்மது ராபுரி காவல் கொண்டான் 

என்ற குறிப்பு வருகிறது.

    இங்ஙனம் காவல் கொண்டவன் களப்பிரர் குலக் காவலனான அச்சுதவிக்கந்தன்.  இதனை வேள்விக்குடிப் பட்ட யாத்தாலும் அறியலாம்.

    சிறுத்தொண்டர் புராணத்துள்,

        மன்னவர்க்குத் தண்டுபோய்
            வடபுலத்து வாதாவித்
        தென்னகரம் துகளாகத்
            துணைநெடுங்கை வரைஉகைத்துப்