ச
சிறு வீடு கட்டி
விளையாடிய சிறுமியர், உயர்ந்த அணிகலன்களை அணிந்திருந்தனர் என்பதையும் இளம் பருவத்தினராய்
இருந்தனர் என்பதையும் வளைந்த பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியினராய் இருந்தனர் என்பதையும்
பிள்ளை அவர்கள் அழகுற மொழிந்திருப்பதைக் காண்க. “உயர்வு பூண்” என்றது, அளபந்தி, ஊசலாடும்
குழை, முலை ஆரம், மணிக்கடகம், தோள் அணி, பாதச் சிலம்பு, மூக்கணி, காதணி, வளை முதலியன.
சீதைக்கு அலங்காரம் செய்தபோது, இவற்றை அணிந்ததாகக் கம்பர்,
விதியது வகையால் வானம்
மீன்இனம் பிறையை வந்து
கதுவுறு கின்ற தென்னக்
கொழுந்தணி கலஞத் தூக்கி
மதியினைத் தந்த மேகம்
மருங்குநா வளைப்ப தென்னப்
பொதியிருள் அளக பந்தி
பூட்டிய பூட்டும் இட்டார்.
வெள்ளத்தின்
சடிலத் தான்தன்
வெஞ்சிலை
இறுத்த வீரன்
தள்ளத்தன் ஆவி
சோரத் தனிப்பெரும்
பெண்மை தன்னை
அள்ளிக்கொண்
டகன்ற காளை
அல்லன்கொல்
ஆம்கொல் என்பாள்
உள்ளத்தின் ஊசல்
ஆடும்
குழைநிழல் உமிழ
விட்டார்
கோணிலா வான
மீன்கள்
இயைவன கோத்த
தென்கோ
வாணிலா வயங்கு செவ்வி
வளர்பிறை வகிர்ந்த
தென்கோ
நாணிலா நகையின்
நின்ற
நளிர்நிலாத்
தவழ்ந்த தென்கோ
பூணிலா முலைமேல்
ஆர முத்தையான்
புகல்வ தென்னோ
தளைஅவிழ் கோதை ஓதிச்
சானகி தளிர்க்கை என்னும்
முளரிகள் இராமன் செங்கை
முறைமையில் நீண்ட நோற்ற
அளியன கங்குல் போதும்
குவியல ஆகும் என்றாங்
கிளிவெயில் சுற்றி அன்ன
எரிமணிக் கடகம் இட்டார்
|