ந
நிறம்செய் கோசிக நுண்தூசு
நீவிநீ வாத அல்குல்
புறம்செய் மேகலையும் தாழத்
தாரகைச்சும்மை பூட்டித்
திறம்செய் காசீன்ற
சோதி பேதைசேய் ஒளியில் தீர்ந்த
கறங்குபு திரியத் தாமும்
கண்விளக் கற்று நின்றார்
ஐயவாம் அனிச்சப் போதின்
அதிகமும் நொய்ய ஆடல்
பையர அல்கு லாள்தன்
பஞ்சின்றிப் பழுத்த பாதம்
செய்யபூங் கமலம் அன்னச்
சேர்த்திய சிலம்பு சால
நொய்யவே நொய்ய என்றோ
பலபட நுவல்வ தம்மா
என்று பாடியுள்ள பாடல்களால்
தெளியலாம்.
பிரபுலிங்க லீலையில்
கற்பனைக் களஞ்சியமாம் சிவப்பிரகாசரும் மாயைக்குத் தோழிமார் அணிந்த பூண்கள் இன்ன என்பதையும்
அழகுறக் கூறியுள்ளனர். அவற்றையும் ஈண்டு அறிதல் நம் அறிவுக்கு ஒரு பெரு விருந்தாகும் அன்றோ !
அவர் பாடிய பால்கள் வழி அந்த நகை வகைகளையும் காண்க. அப்பாடல்கள்,
பின்னும் வேணிவார் குழல்எனும்
கரியபேர் அரவம்
முன்னம் ஆர்தரு
சுடர்களை உமிழ்ந்திடு முறைபோல்
கன்னி வாள்நுதல் மிசைக்கதிர்
பிறையொடு கவினப்
பொன்ன வாம்சுணங் கவிர்முலை
ஒருத்திகை புனைந்தாள்
ஓதி ஆகிய அறல்மிசைச்
சுவடுற ஊர்ந்து
தீதி லாதவெண் சந்தனத்
திலகவெண் மதிக்குப்
போதும் ஓர்சிறு பாம்பென
மயிர்வகிர்ப் பொருந்தச்
சோதி மாமணிச் சுட்டிஒன்
றொருத்திதூக் கினாளால்
அடுத்து மாதவம் அழிமின்என்
றனங்கவேள் தமக்கு
விடுத்த ஓலையைக் கண்கள்தம்
மேல்பழி விளம்பில்
கொடுத்த வேள்மிசை நிந்தைகூ
றுதற்குவைத் திருத்தல்
கடுத்து வாழ்தர ஒருத்திபொன்
ஓலைகா தணிந்தாள்
தன்னை நிந்தைசெய் வெண்ணகை
மேல்பழி சார
மன்னி அங்கது நிகர்அற
வாழ்மனை வாய்தன்
முன்இ றந்திடு வேன்என
ஞான்றுகொள் முறைமை
என்ன வெண்மணி முக்கணி
ஒருத்திநின் றிட்டாள்
கற்றை அம்குழல் நறுமலர்த்
தொடையொடு கனமாய்
உற்ற ணங்குமென் றிலகுபூண்
பிடித்ததை ஒப்ப
|