வ
விற்ற யங்குவாள் நுதல்எழில்
மாயைதன் மிடற்றில்
பொற்ற டம்தகட் டணிஒரு
மடவரல் புனைந்தாள்
கன்னி அத்தம்வந் தினமணிக்
கற்கட கத்தில்
மன்னி யுற்றதற் புதம்என
வளைபல காக்க
வின்னு தல்கருங் கண்மட
மாதுகை விளங்க
பொன்னின் நல்கட கம்புனைந்தனள்
ஒருபூவை
ஆயும் இன்சுவை தரச்செலும்
கையுடன்அடுத்து
வாயின் ஒண்கவின் காணிய
மருவுறு மாபோல
மாயை தன்கையில்
பொற்கட கத்தின்முன் வனைந்தாள்
தூய செம்பவ ளங்களைக்
கோத்தொரு தோகை
மங்க லத்தொழில்
ஆடவர் மனம்நடக் கிற்காக்
குங்கு மப்பெருஞ் சேற்றினைக்
குறித்திடு கல்போல்
மங்கை யர்க்கொரு திலகமா
கியஎழில் மாயை
கொங்கை யிப்புனைந் தனள்ஒரு பெண்மணிக்கோவை
பாயும் வெண்திரைக்
கருங்கடல் நிலச்சுமை பாம்பின்
ஆயி ரம்படங் களும்திறை
இட்டன அனைய
மீஇ லங்கொளி விரிமணி
மேகலை வேய்ந்தாள்
மாயை மங்கைதன் அல்குலின்
ஒருதிரு மடந்தை
கறைஅ டிக்களி யானையின்
வரவினைக் கண்டு
மறுகின் உற்றவர் இரிதர
மணிமருங் கிடல்போல்
உறுத வத்தினர் அறிந்தனர்
ஓடஒண் ணுதற்கு
நறும லர்ப்பதத் தணிந்தனள்
சிலம்பொரு நங்கை
என்பன இன்னோரன்ன பூண்கள்
உயர்வுபூண்கள் அல்லவோ?
வண்டல் என்பது மகளிர்
சிற்றில் கட்டி ஆடுவதே ஆகும். இதனைச் சேக்கிழார் காரைக்கால் அம்மையார் புராணத்துள் சிறப்பாகக்
குறிப்பிட்டும் உள்ளார். இதனை,
வண்டல்பயில்
வனஎல்லாம்
வளர்மதியம்
புனைந்தசடை
அண்டர்பிரான் திருவார்த்தை
அணையவரு வனபயின்று
என்ற அடிகளில் காண்க.
அம்மையாரது வண்டலாடல்
இறைவனது தொடர்புடையதாக இருந்தமையின், அதனை எக்குழந்தையும்
|