ச
சிதைத்திலது
போலும் ! இங்குள்ள சிறுமியர் அவ்விறைவன் சம்பந்தம் இன்றி ஆடினமையின், சேக்கிழாராம் குழந்தை
சிதைத்தது போலும் !
ஈண்டும் உயர்வு நவிற்சி
அணி அமையும்படி, திரு. பிள்ளை அவர்கள் வாழையின் வளத்தைப் புகழ்கிறார்.
வாழையின் குறுத்து
நீண்டு வளர்ந்து ஆகாயம் அளாவச் சென்று, சந்திரனது நடுப்பகுதியில் நுழைந்து இருந்ததாம். அக்காட்சி
மன்மதனது குடையாம் சந்திர வட்டத்திற்குக் காம்பாகப் பொலிந்ததாம். என்னே பிள்ளை அவர்களின்
கற்பனைத் திறம் !
மன்மதனுக்குக்
கிளிகள் குதிரை என்றும், தென்றல் தேர் என்றும், சந்திரன் குடை என்றும் புலவர் கூறுதல் மரபென்க.
(77)
7. ஏதம் அகல
வளவன்முனம்
ஏற்று குடிகள்
ஒருநாற்பத்
தெண்ணா யிரத்துள்
ஒருகுடிஎன்
றியம்பேம்
அபயன் அமாத்தியருள்
போதம் மருவும்
ஒருவன்எனப்
புகலேம் புராணம்
செய்தாருள்
பொலியும் ஒருவன் எனநவிலேம்
புகலின் மூவ
ருளும்ஒருவன்
நாதம் அகன்ற
பரமன்என
நவிலின்
அடைவ தடையுமென
நன்று தெரிந்தேம்
எங்கள்செயல்
நயவா திருக்கும்
திறம்என்னே
சீத வளத்தண்
டகநாடா
சிறியேம்
சிற்றில் சிதையேலே
செல்வம் செருக்கு
குன்றையருள்
செல்வா
சிற்றில் சிதையேலே
|