பக்கம் எண் :

New Page 1

636

             சிற்றில் பருவம்

தொல்காப்பிய உரையாலும் புலனாகிறது. “வடநாட்டினின்றும் தென்னாட்டிற்கு வந்த அகத்தியர் நிலம் கடந்த நெடுமுடி அண்ணல் வழிக்கண் அரசர் பதின் எண்மரையும் பதினெண்கோடி வேளிர் உள்ளிட்டோரையும் அருவாளரையும் கொண்டுபோந்து காடு கெடுத்து நாடாக்கிப் பொதியின் கண் இருந்தார்” என்று உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் எழுதி இருப்பதையும் காணவும்.

    ஈண்டுக் கரிகால்வன் குடி ஏற்றிய நற்குடி நாற்பத்தெண்ணாயிரவர் வேளாளர் ஆவார்.  இதனை உமாபதி சிவனார்,

    நாடெங்கும் சோழன்முனம் தெரிந்தே ஏற்று
        நற்குடிநாற் பத்தெண்ணா யிரத்து வந்த
    கூடல்கிழான் புரிசைகிழான் குலைவு சீர்வெண்
        குளப்பாக்கி ழான்வரிசை குளத்து ளான்முன்
    தேடுபுக ழாரிவரும் சிறந்து வாழச்
        சேக்கிழார் குடியில்இந்தத் தேசம்உய்யப்
    பாடல்புரி அருண்மொழித்தே வரும்பின் நந்தம்
        பாலறாவா யாரும்வந் துதித்து வாழ்ந்தார்

என்று உணர்த்தியவாற்றால் அறியலாம்.

    ஈண்டு, “ஒரு குடி என்று இயம்பேம்” என்று சிறுமியர் விதந்து கூறியதன் உட்பொருள், “நாற்பத்தெண்ணாயிரக் குடிகளுள் ஒரு குடி சேக்கிழார் குடி என்று நாங்கள் இகழ்ச்சி தோன்ற இயம்பேம்.  அவற்றில் சிறந்த குடி சேக்கிழார் குடி என்பதே எங்கள் கருத்து, “ என்பதாகும்.   இதுதான் கருத்து  என்பதை உமாபதியாரும்,   “சிறந்து வாழச் சேக்கிழார்  குடியில்   இந்தத்   தேசம்   உய்யப்   பாடல்புரி   அருண்  மொழித்தேவர்” என்று சிறப்பித்திருப்பதாலும் உணரலாம்.

    அபயன் ஈண்டு, அனபாய சோழன் ஆவான்.  அவன் அவனை அடைந்தவர்களின் பயத்தைப் போக்குவான் என்ற கருத்தில் இப்பெயரைப் பெற்றனன்.  அமாத்தியர் என்பார் அமைச்சர்.  அமாத்தியர் என்ற வடசொல்லின் பொருள் அரு