பக்கம் எண் :

 

       சிற்றில் பருவம்

637

கில் இருப்பவர் என்பதாம்.  இதனை  நந்தம்  தமிழ்  நூல்  “உழை இருந்தான்”   என்று உரைக்கும்.  தமிழில் தனித் தமிழ்ச் சொற்களுக்குக் குறைவு இல்லை. நினைந்து ஆளாமை நமது  குறை திருவள்ளுவர்,  “உறுதி உழை இருந்தான் கூறல் கடன்” என்று கூறி இருப்பதைக் காண்க.

    தமிழ் பிறமொழியின் துணை இன்றித் தனித்துத் திகழும் தன்மையது என்பதை நடுநிலை பிறழாது பன்மொழிகளை நன்கு ஆய்ந்து படித்தமேற்கு நாட்டவரான ரெவரண்டு கால்டுவெல் அவர்கள்,

    The  Tamil however, the most highly cultivated abintra of all Dravidian idoms can dispense with its Sanskrit altogether. If need be.  and not only stand alone, but flourish without its aid” என்று ஆணித்தர மாகத் தமது திராவிட மொழி, ஒப்பிலக்கண மொழி நூலில் எழுதி இருப்பதை ஈண்டு அறிதல் இன்றியமையாதது.

    மந்திரிமார்களுள் ஒருவர் சேக்கிழார் என்றும் கூற மாட்டோம்.  அம்மந்திரிமார்களுள் தலை சிறந்த தலைமை அமைச்சர் என்றே கருதுவோம் என்பர், “ ஒருவன் எனப் புகலேம்” என்றனர்.  “தன் செங்கோல் ஓச்சும் தலைமை அளித்து” என்று உமாபதியார் உரைத்திருப்பதையும் நினைவு கொள்வோமாக.  

    புராணம் செய்தவர்கள் பலர்.  அவர்களுள் ஒருவர் சேக்கிழார் என்றும் கூற முடியாது என்பது உண்மை.  ஏனெனில் ஏனைய புலவர்கட்கு அந்தந்தப் புராண நாடு நகரங்கள் ஆதியாவற்றைப் பாடும் வாய்ப்பு மட்டும் உண்டு. சேக்கிழார்க்குப் பல நாடு, பல நகர், பல மரபு இவற்றைப் பாடும் வன்மை அமைந்திருந்தமையின் ஏனைய புராணங்களைப் பாடிய ஆசிரியர்கள் இவருக்கு ஒப்பாகார் ஆயினர்.  இதனை உமாபதியார்,