பக்கம் எண் :

638

             சிற்றில் பருவம்

ஓருலகோ ஒருதிசையோ ஒருபதியோ தம்மில்
    ஒருமரபோ ஒருபெயரோ ஒருகாலம் தானோ
பேருலகில் ஒருமைநெறி தருங்கதையோ பான்மைப்
    பெருங்கதையோ பேர்ஒன்றோ அல்லவே இதனை கொண்டு
ஏருலகெ லாம்உணர்ந்தோ தற்கரிய வன்என்  
    றிறைவன்முதல் அடிஎடுத்துக் கொடுத்தருளக்
பாருலகில் நாமகள்நின் றெடுத்துக்கை நீட்டப்
    பாடிமுடித் தனர்தொண்டர் சீர்பரவ வல்லார்

என்றதும் காண்க.  இத்தகைய காரணங்களால்தான் “புராணம் செய்தாருள் பொலியும் ஒருவன் என நவிலேம்” என்று சிறுமியர் செப்பினர்.

    மூவர் ஆவார் அரி, அயன், அரன் என்பவர்கள. அரன் என்பவன் முழு முதற் பரம்பொருளாம் முக்கண் மூர்த்தி அல்லன். அரன் ஆவான் உருத்திரனாவான்.  முக்கட்பரன் அரனில் வேறானவன் என்பதை மணிமொழியார் நன்கு விளக்கியுள்ளதைக் கீழ்வரும் திருவாசகப் பாடலில் சிந்தனை செலுத்தி உணர்தல் வேண்டும்.

    பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
    நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
    மாவேறு சோதியும் வானவரும் தாம்அறியாச்
    சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ

என்ற பாடலைக் காண்க.

    இங்ஙனம் இருக்கப் பரசிவப் பொருளை மூவருள் ஒருவனாகக் கருதலாமோ? கருதுகின்றவர்களைக் குறித்து இரக்கங்கொண்டே மணிமொழியார் மேற்கொண்டவாறு ஒரு வாசகத்தை அருளியுள்ளனர்.

    இவ்வுண்மை இங்ஙனம் இருக்க, இதனை உணராத நிலையில்,

    நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
    தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான்

என்று திருமழிசை ஆழ்வாரும், அவர் தம் நூலுக்குத் தனியன் பாடிய சீராமப் பிள்ளை என்பவரும், இவரது கருத்தொட்டி,