ச
சாற்றும்அச் சிவனுக்
கிச்சா சத்திஅங் கிருவ ராலும்
தோற்றுவன் உருத்தி ரன்தான்
சொல்லிய அவர்க்குச்சத்தி
மாற்றரும் கிரியை என்பர்
மற்றவர் இருவர் பாலும்
போற்றுரும் அரியு திப்பன்
பொறிஅவன் சத்தி யாமால்
அத்திரு மாலும் மாவும்
அளிப்பவந் துதிப்பன் வண்டு
மொய்த்திசை முரலும் செங்கேழ்
முளனவன் அவற்குச்
சத்திவெண் கமலை அன்னோர்தர
வரும் உலகில் தோற்றம்
நித்தன்நம் குருகு கேசன்
நினைவுமாத் திரையின் ஆமால்
என்ற பாடல்களைக் காண்க.
“மூவர் என்றே எம்பிரானொடும்
எண்ணிவிண் ணாண்டு மண்மேல் தேவர் என்றே இறுமாந்தென்ன பாவம் திரிதர்வரே” என்று திருவாசகம்
இரக்கத்தோடு கூறியதையும் காண்க.
இரட்டையர்கள் இறைவனை மூவருள் ஒருவன் என்று கூறுதல் நரகத்திடை உய்ப்பதாகும் என்றே மொழிந்துள்ளனர். அப்பாடல்,
மூவா முதலா முதல்வனையும்
மூவுலகில்
சாவார் பிறப்பார்கள்
தங்களையும்-தேவாக
ஒக்க நினைவாருக்
கல்லவோ ஓர்ஏழு
மிக்கநரகம் விதித்தது
காண்
என்பது.
அப்பர் பெருமானார்
இவ்வாறு மக்கள் அறியாமையால் நாதம் அகன்ற பரனை மூவர்களூள் ஒருவராகக் கருதி நரகத்தில் இடர்ப்படுவரே
என்று அவர்பால் இரக்கங் கொண்டு உபதேசிப்பாராயினர். அவ்வுபதேசங்கள்,
நூறு கோடி பிரமர்கள்
நொங்கினார்
ஆறு கோடி நாராயணர்
அங்ஙனே
ஏறு கங்கை மணல்எண்ணில்
இந்திரர்
ஈறி லாத ஈசன்
ஒருவனே
|