பக்கம் எண் :

644

             சிற்றில் பருவம்

நீக்கும், முன்னம்-எண்ணம், சிற்சிலர் வைணவர், நுதலில்-நெற்றியில், முயங்கி-சேர்ந்து, மண்-திருமண் (நாமம்) முருங்க-உருவம் வேறுபடும்படி, துளைதல்-அழுந்தித் திளைப்பது, நீத்து-ஒழித்து, மோகம்-மயக்க ஆசை, உய்வர்-பிழைப்பர்.

    விளக்கம் : சிலம்பு என்பது பெண்கள் காலில் அணியும் ஒருவகைக் காலணி.  அவ் அணியினுள் பரல்கள் உண்டு.  அதன் காரணமாக அவ்வணிஒலி செய்யும்.  சிலம்பில் பரல்கள் உண்டு என்பதைச் சிலப்பதிகாரம் நன்கு தெரிவிக்கிறது.  அப்பரல் அவர் அவர்களின் செல்வ நிலைக்கேற்ப, முத்தாகவேனும், மாணிக்கமாகவேனும் அமையும்.  கண்ணகி அணிந்த சிலம்பில் மாணிக்கம் இருந்ததை, “என் கால் பொற்சிலம்பு மண்யுடை அரியே” என்று அவளே கூறியதனாலும், “யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே” என்று பாண்டியனே கூறியதனாலும் தெரிந்து கொள்ளலாம்.  இச் சிலம்பு செல்வ நிலைக்கு ஏற்பப் பொன்னாலும் செய்யப்பட்டதும் உண்டு.  கண்ணகி  “பொற்சிலம்பு” என்று குறித்திருப்பதையும் “அரவிந்தத்தாள் அணியும் செம்பொற் சிலம்பே சிலம்பு” என்று ஒளவையார் பாடி இருப்பதையும் கொண்டு அறியலாம்.  இவற்றைக் கொண்டே ஈண்டு “பொன்னம் சிலம்பு புலம்பு அடி” எனப்பட்டது.  குழந்தைகட்கு மண் புழுதியில் படிந்து ஆடுதலில் விருப்பம் உண்டு என்பதை நாம் கண் கூடாகக் காண்கிறோம்.  ஆகவே “மண் பொருந்தித் துளையும் விழைவு” என்றனர்.

    உபநிடதம் நூற்றெட்டு என்பர் ஒரு சிலர்.  ஆயிரத்து நூற்று எண்பது என்பர் மற்றும் சிலர்.  இவ்வாறு எண்ணிக்கை மிக்கிருத்தலின் “பற்பல” என்றனர்.  ஆனால், சிறந்த உபநிடதங்களாக அறிஞர்கள் கொள்வன காலாக்கினி உருத்திரம், தைத்திரியம், யோகதத்துவம், காபாலி, வாசுதேவம், பசுமசாபாலாம், பிருகச்சாபாலம், நாரதபலி விராசம், இராமரகசியம், சாண்டில்லியம், திரிபுரதாபுனி அதர்வசிரம், ஈசாவாசியம், பருகதாரண்யம், நாராயணீயம் என்பன.